Breaking News

தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவின் தலைவராக அப்துல் சமத் எம்.எல்.ஏ. தேர்வு tamilnadu haj committee

அட்மின் மீடியா
0

தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவின் தலைவராக அப்துல் சமத், எம்.எல்.ஏ. ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், ஹஜ் குழுசட்டம், 2002-ன்படி, ( மைய சட்டம் 35/2002) தமிழ்நாடு மாநில ஹஜ் குழு அரசாணை நிலை எண் 44, பிற்படுத்தப்பட்டோர். மிகப்பிற்படுத்தப்பட்டோர் (ம) சிறுபான்மையினர் நலத்துறை நாள் 15.06.2023-ல், 16 உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டு, திருத்தியமைக்கப்பட்டது. 


தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவின் முதல் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்திலுள்ள சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் (ம) வனத்துறை கூட்ட அரங்கில் 22.02.2024 அன்று நண்பகல் 04.00 மணியளவில் பிற்படுத்தப்பட்டோர்.மிகப்பிற்படுத்தப்பட்டோர் (ம) சிறுபான்மையினர் நலத் துறையின் செயலாளர் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. 

அக்கூட்டத்தில், தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவின் தலைவராக திரு.P. அப்துல் சமத், எம்.எல்.ஏ., அவர்கள் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டு, அரசாணை (ப) எண் 22 பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை, நாள் 22.02.2024-ன்படி தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்டது. என அறிவிக்கபப்ட்டுள்ளது

Tags: அரசியல் செய்திகள் தமிழக செய்திகள் மார்க்க செய்தி

Give Us Your Feedback