Breaking News

தமிழகம் முழுவதும் இன்று கல்வி கடன் முகாம் தேவையான ஆவணங்கள் என்ன என்ன? முழு விவரம் Tamilnadu Education Loan Mela

அட்மின் மீடியா
0

தமிழகம் முழுவதும் இன்று கல்விகடன் முகாம் தேவையான ஆவணங்கள் என்ன என்ன? முழு விவரம் Tamilnadu Education Loan Mela

தமிழகம் முழுவதும் இன்று கல்விக்கடன் சிறப்பு முகாம் அந்த அந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் நடைபெற உள்ளன. இதில் கலந்து கொண்டு எளிதாக கல்விக்கடன் பெறுமாறு மாணவர்கள் பெற்றோர்களுக்கு தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது.

அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் கலை மற்றும் அறிவியல், பொறியியல், பட்டய பொறியியல், மருத்துவம், விவசாயம், செவிலியர், சட்டம் மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற 2 ஆண்டிற்கு மேற்பட்ட அனைத்து கல்லூரி படிப்பிற்கான கல்விக்கடனை எதிர்நோக்கி காத்திருக்கும் மாணவ, மாணவியர்கள் இந்த முகாமில் கலந்து கொள்ளலாம்

www.vidyalakshmi.co.in அல்லது www.jansamarth.in எனும் இணைய தளங்களில் விண்ணப்பத்தை,பதிவேற்றம் செய்தும் முகாமில் சமர்ப்பிக்கலாம்.

கல்விக்கடன் தொகை ரூ.4 லட்சம் முதல் ரூ.7.5 இலட்சம் வரை மாணவர்கள், பெற்றோரின் உறுதி மொழி பத்திரம் மட்டும் போதுமானது. மேலும், ரூ.7.5 இலட்சத்திற்கு மேல் கல்விக்கடன் தேவைப்படுவோர் கட்டாயம் சொத்து பிணை அவசியம் மற்றும் 3ம் நபர் உத்திரவாதமும் கொண்டுவர வேண்டும்.முகாமில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், தனியார் வங்கிகள் பங்கேற்று விண்ணப்பங்களை பெற்று தகுதியானவர்களுக்கு கல்விக்கடன் வழங்க, விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

தேவையான ஆவணங்கள்:-

விண்ணப்ப நகல், 

மாணவர் மற்றும் பெற்றோரின், 2 புகைப்படம், 

வங்கி சேமிப்பு கணக்கு புத்தக நகல், 

இருப்பிட சான்று நகல், 

வருமான சான்று நகல், 

ஜாதிச்சான்று, 

பான் கார்டு நகல், 

ஆதார் அட்டை நகல், 

கல்லுாரியில் இருந்து பெறப்பட்ட கல்விக்கட்டண விபரம்,

10ம் வகுப்பு, பிளஸ் 2 மதிப்பெண் சான்று, 

முதல் பட்டதாரி எனில் அதற்கான சான்று

Tags: கல்வி செய்திகள் தமிழக செய்திகள் முக்கிய செய்தி

Give Us Your Feedback