Breaking News

தென்காசியில் தொழுகைக்கு நடந்து சென்ற முதியவரை துரத்தி துரத்தி கடித்த நாய் வைரல் வீடியோ stray dog bites old man in tenkasi

அட்மின் மீடியா
0

தென்காசி நகராட்சிக்கு உட்பட்ட கீழபாறையடி 2-ம் தெருவை சேர்ந்த முதியவர் தெப்பக்குளம் அருகே உள்ள பள்ளிவாசலில் தொழுகைக்கு செல்லும் போது அப்போது அந்தச் சாலையில் நின்று கொண்டிருந்த நாய் அவரைப் பார்த்து குறைத்தது மட்டுமில்லாமல் அவரை மீது பாய்ந்து கடித்துள்ளது.முதியவர் நாயை விரட்டும் முயற்சியில் ஈடுபட்ட நிலையில் அவர் மீது பாய்ந்து குதறி உள்ளது. இதனை பார்த்த இளைஞர் ஒருவர் நாயை விரட்டி முதியவரை மீட்டுள்ளார்.

தென்காசி நகராட்சிக்கு உட்பட்ட கீழபாறையடியைச் சேர்ந்த முதியவர் பள்ளிவாசலில் தொழுகைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது வழியில் நின்று கொண்டிருந்த தெருநாய் ஒன்று அவரை நோக்கி குரைத்துள்ளது. அவர் பயந்து ஒதுங்கிய நிலையில், நாய் அவர் மீது தாவிப் பாய்ந்து கடிக்கத் தொடங்கியது. 

நாயை விரட்ட முயன்ற போதும் மீண்டும் மீண்டும் நாய் பிடி விடவில்லை. நாயை சமாளிக்க முடியாத முதியவர் அங்கேயே கீழே விழுந்துள்ளார். இதனைக் கண்ட மற்றொரு நபர் செங்கல்லை தூக்கிக் கொண்டு வந்து, நாயை ஓட ஓட விரட்டியடித்தார். தொடர்ந்து முதியவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகின்றது


வைரல் வீடியோ பார்க்க:- இங்கு கிளிக் செய்யவும்

https://www.youtube.com/watch?v=huXBnYcX1IE

Tags: தமிழக செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback