Breaking News

கல்லூரி மாணவ மாணவிகளுக்கான கல்வி உதவித் தொகை அறிவிப்பு ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி scholarship for college students tamil nadu

அட்மின் மீடியா
0
scholarship for college students tamil nadu அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற்கல்லூரிகளில் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகப்பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபின மாணவ மாணவியர்கள் புதியதிற்கு (Fresh) கல்வி உதவித்தொகை பெற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன் குமார், இஆபஅவர்கள் தகவல்

 

தமிழ்நாடு அரசு, அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகப்பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் மாணவ, மாணவியருக்கு பல்வேறு திட்டங்களின் கீழ் கல்வி உதவித் தொகை வழங்கி வருகிறது.

 


மேலும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மூன்றாண்டு இளங்களை பட்டப்படிப்பு பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகப்பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் மாணவ, மாணவியருக்கு இலவச கல்வித்திட்டத்தின் கீழ் எவ்வித நிபந்தனையுமின்றி கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது. முதுகலை, பாலிடெக்னிக், தொழிற்படிப்பு போன்ற பிற படிப்புகளுக்கு பெற்றோரது ஆண்டு வருமானம் ரூ.2,50,000/- க்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.

நடப்பாண்டில் புதியது மாணாக்கர்கள் https://ssp.tn.gov.in என்ற இணைய தள முகவரியில் Student Loginல் சென்று ஆதார் எண் அளித்து -KYC Verification செய்ய வேண்டும். கல்வி உதவித்தொகை இணையதளம் (Scholarship Portal) புதியதிற்கு (Fresh) 01.02.2024 முதல் செயல்பட துவங்கும். புதியதிற்கான விண்ணப்பங்கள் மாணாக்கர்கள் 29.02.2024 க்குள் இணையதளம் மூலம் சமர்ப்பிக்கப்பட வேண்டும். 

மேலும், கூடுதல் விவரங்களுக்கு தங்கள் கல்லூரியில் உள்ள கல்வி உதவித்தொகை உதவியாளரையோ அல்லது மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தையோ அணுகி பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன் குமார், இஆப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க இங்கு கிளிக் செய்யவும்:-

அட்மின் மீடியா செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள 

Follow as on google news             :- CLICK HERE 



follow us on twitter                       :- CLICK HERE 

Follow us on Facebook                 :- CLICK HERE 

Follow us on telegram                  :- CLICK HERE 

Follow us on whatsapp channel   :- CLICK HERE 

Follow as on Instagram                :- CLICK HERE 

download our app play store        :- CLICK HERE

Tags: தமிழக செய்திகள் முக்கிய செய்தி

Give Us Your Feedback