Breaking News

ஹஜ் யாத்ரீகர்களுக்கு நேரத்திற்கு உணவு வழங்க தரவில்லை என்றால் இழப்பீடு தர வேண்டும் - சவூதி அமைச்சகம் அதிரடி உத்தரவு Saudi Arabia sets strict meal times for domestic pilgrims

அட்மின் மீடியா
0

ஹஜ் யாத்ரீகர்களுக்கு நேரத்திற்கு உணவு வழங்க தரவில்லை என்றால் இழப்பீடு தர வேண்டும் - சவூதி அமைச்சகம் அதிரடி உத்தரவு



ஹஜ் யாத்ரீகர்களுக்கு சரியான நேரத்தில் உணவு வழங்கப்படாவிட்டால் இழப்பீடு செலுத்த வேண்டியிருக்கும் என்று ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம் எச்சரித்துள்ளது.ஹஜ் சேவைகளை வழங்க உரிமம் பெற்ற நிறுவனங்களுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஹஜ்ஜின் போது மினா, அராஃபத் மற்றும் முஸ்தலிஃபாவில் உள்ள உள்நாட்டு யாத்ரீகர்களுக்கு உணவு விநியோகிக்கும் நேரத்தையும் அமைச்சகம் (Ministry of Hajj and Umrah) தெளிவாக வெளியிட்டுள்ளது.

உணவு நேரம்:-

அராஃபத் தினத்தில் காலை உணவு பரிமாறும் நேரம் காலை (ஃபஜ்ர்) தொழுகைக்குப் பிறகு 10:00 மணி வரை ஆகும்.அரஃபா நாளில் மதிய உணவு பரிமாறும் நேரம் மதியம் 1:30 முதல் 3 மணி வரை. அரஃபாவிலிருந்து வரும் யாத்ரீகர்கள் முஸ்தலிஃபாவை அடைந்தவுடன் இரவு உணவு வழங்கப்படும்.

தர்விய்யா (துல் ஹிஜ்ஜா 8) மற்றும் தஸ்ரீக் நாட்களில் (துல் ஹிஜ்ஜா 11, 12, 13) உணவு விநியோகம் பின்வருமாறு இருக்கும்

காலை உணவு காலை 5:00 மணி முதல் 10:00 மணி வரை, மதிய உணவு மதியம் 1:30 முதல் 3:30 மணி வரை, இரவு உணவு இரவு 8:30 முதல் 11:30 மணி வரை ஆகும்.

குறிப்பிட்ட நேரத்திற்குப் பிறகு உணவு வழங்கப்பட்டால், யாத்ரீகர்களுக்கு இழப்பீடு செலுத்த வேண்டும்.

அராஃபத் நாளில் மதிய உணவு வழங்குவதில் தாமதம் ஏற்பட்டால், யாத்ரீகருக்கு மொத்தப் பேக்கேஜ் தொகையில்  5 சதவீதமும், மற்ற நேரங்களில் உணவு வழங்குவதில் தாமதம் ஏற்பட்டால் பேக்கேஜ் தொகையில் 3 சதவீதமும் இழப்பீடு வழங்கப்படும் என தெரிவிக்கபப்ட்டுள்ளது

News Source

Tags: மார்க்க செய்தி வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback