Breaking News

நடிகர் எஸ்.வி.சேகருக்கு 15,000 அபராதம் ,ஒரு மாதம் சிறைத் தண்டனை சிறப்பு நீதிமன்றம் உத்தரவு முழு விவரம் S Ve Shekher

அட்மின் மீடியா
0

பெண் பத்திரிகையாளர் குறித்து அவதூறு கருத்து வெளியிட்ட நடிகர் எஸ்.வி.சேகருக்கு ஒரு மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.


பேபுக்கில்  பெண் பத்திரிகையாளர் குறித்து அவதூறாக பதிவு செய்த எஸ்.வி.சேகர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையில் தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் புகார் அளிக்கப்பட்டது இந்திய தண்டனை சட்டம் மற்றும் பெண்கள் மீதான கொடுமைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் 2019 ஆம் ஆண்டு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் குற்றபத்திரிக்கை தாக்கல் செய்யபட்டது.

இந்த வழக்கை விசாரித்த சென்னை சிறப்பு நீதிமன்றம், நடிகர் எஸ்.வி.சேகருக்கு ஒரு மாதம் சிறைத் தண்டனையும், ரூ. 15 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவிருப்பதாக எஸ்.வி.சேகர் தரப்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில், தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டது.மேலும், அபராத தொகை ரூ. 15,000-ஐ நீதிமன்றத்தில் எஸ்.வி.சேகர் செலுத்தினார்.

Tags: அரசியல் செய்திகள் தமிழக செய்திகள்

Give Us Your Feedback