சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி உடல் மீட்பு வீடியோ rip vetri duraisamy
சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி உடல் மீட்பு வீடியோ rip vetri duraisamy இமாச்சலப் பிரதேசத்தில் கார் விபத்தில் சட்லெஜ் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட வெற்றி துரைசாமியின் உடல் மீட்புசென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன், வெற்றி துரைசாமி கடந்த 4ம் தேதி விபத்தில் சிக்கினார். விபத்துக்குள்ளான இடத்தில் இருந்து 6 கி.மீ தொலைவில் ஆற்றில் அவரது உடல் கிடைத்துள்ளது
சென்னை முன்னாள் மேயரான சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி தனது நண்பர் கோபிநாத் என்பவருடன் இமாச்சல பிரதேசம் சென்றுள்ளார்.
இமாச்சலப்பிரதேசத்தின் காசங் நாலா என்ற இடத்தில் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த இன்னோவா கார் ஆனது கட்டுப்பாட்டை இழந்து சட்லஜ் ஆற்றுக்குள் கவிழ்ந்து விபத்துகுள்ளானது
இதில் வெற்றி துரைசாமி காரின் பின் இருக்கையிலும் அவரது நண்பர் முன் இருக்கையிலும் அமர்ந்துள்ளனர். நண்பர் மற்றும் ஒட்டுநர் சீட் பெல்ட் அணிந்து இருந்ததால் விபத்தின் போது காருடன் நதியில் விழுந்துள்ளார்கள்
வெற்றி துரைசாமி பின் இருக்கையில் அமர்ந்து சென்றதால் விபத்து ஏற்பட்டு கார் பள்ளத்தில் உருண்டு விழுந்தது. அப்போது கார் கதவு திறந்தால் வெற்றி தூக்கி வீசப்பட்ட நிலையில் விழுந்துளார்
இதில் கார் ஓட்டுனர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் மேலும் வெற்றி துரைசாமியின் நண்பர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்,
காணவில்லை:-
இந்த விபத்தில் அதில் உடன் இருந்த சைதை துரைசாமியின் மகன் வெற்றியை காணவில்லை எனவும் அவரை தேடும் பணி தொடர்ந்து நடைபெறுவதாக தகவல்கள் வெளியானது
மீட்பு பணியில் சிக்கல்:-
மேலும் ஹிமாச்சலில் கடும் பனிப்பொழிவு ,குளிர் காரணமாக தேடும் பணியில் சிக்கல் நிலவியது இதனை அடுத்து மீட்பு பணிக்காக இந்திய கடற்படையின் உதவி நாடப்பட்டு சென்னை அடையார் கடற்படை தளத்திலிருந்து, சிறப்பு பயிற்சி பெற்ற கடற்படை வீரர்கள் இமாச்சல் பிரதேசத்திற்கு மீட்பு பணிக்கு சென்றார்கள்
சிசிடிவி வீடியோ:-
மேலும் ஹிமாச்சலில் வெற்றி துரைசாமி அவர்கள் கடைசியாக ஓட்டலில் இருந்தபோது பதிவான CCTV காட்சிகள் வெளியானது வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும் https://twitter.com/chnmharish/status/1755278581553349115
1 கோடி பரிசு:-
இதனையடுத்து சட்லஜ் நதியில் மாயமான தனது மகன் குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு ரூ.1 கோடி சன்மானம் வழங்கப்படும் என சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமி அறிவித்தார்
அதேபோல் ரூ.1 கோடி சன்மானம் அறிவிக்கப்பட்ட தகவலை அருகில் உள்ள பழங்குடியின மக்களுக்கு தெரிவிக்கவும் கோரிக்கை விடுத்துள்ளார்.சைதை துரைசாமி தனது நண்பர்களுடன் இமாச்சலப் பிரதேசத்திற்கு விரைந்தார்
உடல்பாகங்கள், செல்போன், உடை:-
தேசிய பேரிடர் மீட்பு குழுவினர், ராணுவம், இந்திய திபெத்திய எல்லை பாதுகாப்பு படை, உள்ளூர் மக்களும் இந்த பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். சுமார் 5 நாட்களுக்கு பிறகு வெற்றி துரைசாமியின் உடைகள் மற்றும் அவருடைய சூட்கேஸ் ம்ற்றும் ஐ போன்கள் கிடைத்தது.
அதனை தொடர்ந்து சட்லஜ் நதி ஓடும் பகுதிகளிலும், நதியை ஒட்டிய பகுதிகளில் இருக்கும் பாறை இடுக்குகளிலும் தேடுதல் பணி துரிதப்படுத்தப்பட்டது.
நதிகளில் ரப்பர் படகில் சென்றவாறு, நீர் மூழ்கி வீரர்கள் ஆழமான பகுதிகளிலும் தேடி வருகிறார்கள். இதுமட்டுமல்லாமல், டிரோன் உதவியுடனும் தேடுதல் பணி நடக்கிறது.
மேலும் இந்திய கடற்படையை சேர்ந்த நீச்சல் வீரர்கள் களம் இறங்க உள்ளனர். இதற்காக அவர்கள் நேற்று மாலை விபத்துக்குள்ளான பகுதிக்கு வந்துவிட்ட நிலையில், அணை பகுதியில் ஆழமாக சென்று தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடைய மனித மூளையின் பாகமும் கிடைத்ததாக கூறப்பட்ட நிலையில் அது தொடர்பான டிஎன்ஏ பரிசோதனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டு வைத்திருக்கிறார்கள். மேலும் மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது
இந்நிலையில் இமாச்சலப் பிரதேசத்தில் கார் விபத்தில் சட்லெஜ் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட வெற்றி துரைசாமியின் உடல் மீட்புசென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன், வெற்றி துரைசாமி கடந்த 4ம் தேதி விபத்தில் சிக்கினார். விபத்துக்குள்ளான இடத்தில் இருந்து 6 கி.மீ தொலைவில் ஆற்றில் அவரது உடல் கிடைத்துள்ளது,உடலை மீட்ட மீட்பு படையினர் உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்
மீட்கபட்ட உடல் வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-
https://www.youtube.com/shorts/BRH4rKPm674
Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள் தமிழக செய்திகள்