Breaking News

புதுச்சேரியில் கேன்சரை உருவாக்கும் பஞ்சு மிட்டாய் விற்பனைக்கு தடை உணவு பாதுகாப்புத் துறை உத்தரவு puducherry cotton candy ban

அட்மின் மீடியா
0

புதுச்சேரியில் பஞ்சு மிட்டாய் விற்க தடை. முறையான ஒப்புதலோடு விற்பனைக்கான உரிமம் பெற்ற பிறகுதான் மீண்டும் விற்பனை செய்ய வேண்டும் என உணவு பாதுகாப்புத் துறை உத்தரவு!

 

புதுச்சேரியில் விற்பனை செய்யப்பட்ட பஞ்சுமிட்டாயில் புற்றுநோயை உருவாக்கும் ரசாயனம் கலக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அதிரடி உத்தரவு

ரசாயனம் கலந்த பஞ்சு மிட்டாய் விற்பனையை தடுக்கவும், புதுச்சேரியில் உள்ள கடைகளில் ஆய்வு செய்யவும் அதிகாரிகளுக்கு ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உத்தரவிட்டு இருந்தார் 

மேலும் தரமற்ற உணவுப் பொருட்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுமென அறிவுரை வழங்கி இருந்த நிலையில் புதுச்சேரியில் பஞ்சு மிட்டாய் விற்க தடை. முறையான ஒப்புதலோடு விற்பனைக்கான உரிமம் பெற்ற பிறகுதான் மீண்டும் விற்பனை செய்ய வேண்டும் என உணவு பாதுகாப்புத் துறை உத்தரவிட்டுள்ளது

Tags: புதுச்சேரி செய்திகள்

Give Us Your Feedback