பெண்களிடம் செயின் பறிப்பு வழக்கில் பொள்ளாச்சியில் போலீஸ் கைது முழு விவரம் Police head constable arrested for chain snatching
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே தனியாக சென்ற பெண்களிடம் புல்லட் பைக்கில் சென்று தொடர் நகைப்பறிப்பில் ஈடுபட்ட செட்டிப்பாளையம் காவல் நிலைய தலைமை காவலர் கைது செய்யப்பட்டுள்ளார்
கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி அருகே மாக்கினாம்பட்டி சாய்பாபா காலனியைச் சேர்ந்த மகேஸ்வரி. 58 வயதான இவர், கடந்த 27 ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் ஜோதிநகர் அருகே வந்து சென்று கொண்டிருந்தபோது இருசக்கர வாகனத்தில் அடையாளம் தெரியாத நபர் அவரது கழுத்தில் இருந்த, 4 பவுன் தங்க சங்கிலியை பறித்து தப்பிச் சென்றுள்ளார் இந்த புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில் .
அதே போல பொள்ளாச்சி அருகே கோலார்பட்டி சுங்கத்தை சேர்ந்த முருகன் என்பவரின் மனைவி அம்சவேணி (32) இருசக்கர வாகனத்தில் உடுமலை சாலையில் செல்லும்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர் அவரது கழுத்தில் இருந்த, இரண்டு பவுன் நகையை பறித்து தப்பிச் சென்றுள்ளார், அந்த புகார் மீதும் நடவடிக்கை எடுத்து விசாரித்து வந்த நிலையில் தனிப்படை அமைத்து குற்றவாளியை தேடி வந்தனர்.
இந்நிலையில் தனிப்படை போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகிய காட்சிகளை ஆய்வு செய்ததில் பொள்ளாச்சி அருகே உள்ள மாக்கினாம்பட்டி பகுதியில் வசித்து வரும் தலைமை காவலர் சபரிகிரி (41) என்பது தெரியவந்தது.இதையடுத்து பொள்ளாச்சி கிழக்கு காவல் துறையினர் அவரை கைது செய்தனர் ,இவர் தற்போது செட்டிபாளையம் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வந்த நிலையில், சிறப்பு பிரிவுக்கு இடமாற்றம் செய்யபட்டார்.
கடன் அதிகமாக இருந்ததால் இதுபோன்ற நகை பறிப்பில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட சபரிகிரி வாக்குமூலம் அளித்துள்ளார். இந்தநிலையில் கோவை மற்றும் பொள்ளாச்சி பகுதியில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற நகை பறிப்பு சம்பவங்களில் இவருக்கு தொடர்பு இருக்கிறதா என போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.அவரிடமிருந்து 7.5 பவுன் நகைகளையும் காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். பின்னர் நீதிமன்ற காவலில் சபரிகிரியை காவல் துறையினர் சிறையில் அடைத்தனர்
Tags: தமிழக செய்திகள்
