சாதி, மதமற்றவர் சான்றிதழ் வழங்க வட்டாச்சியாருக்கு அதிகாரமில்லை சென்னை உயர்நீதிமன்றம் no caste certificate
சாதி, மதமற்றவர் சான்றிதழ் வழங்க வட்டாச்சியாருக்கு அதிகாரமில்லை சென்னை உயர்நீதிமன்றம்
சாதி, மதம் அற்றவர் என்ற சான்றிதழை வருவாய்த்துறை அதிகாரிகள் வழங்க அதிகாரம் இல்லை - சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது
இத்தகைய சான்றிதழ் வழங்குவது சொத்து, வாரிசுரிமை, இடஒதுக்கீடு ஆகியவற்றில் தனிப்பட்ட சட்டங்களை பயன்படுத்தும் போது கடும் விளைவுகளை ஏற்படுத்தும், எதிர்கால சந்ததியினரையும் பாதிக்கும் என கருத்து தெரிவித்த நீதிமன்றம் சாதி, மதம் அற்றவர் என்ற சான்றிதழை வருவாய்த்துறை அதிகாரிகள் வழங்க அதிகாரம் இல்லை எனவும் அரசின் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள சான்றிதழ்களை மட்டுமே வருவாய்த்துறை அதிகாரிகள் வழங்க அதிகாரம் உள்ளது
மேலும் கல்வி நிலைய விண்ணப்பங்களில் சாதி, மதம் தொடர்பான இடத்தை பூர்த்தி செய்யாமல் அப்படியே விட்டுவிடலாம்
திருப்பத்தூரை சேர்ந்த சந்தோஷ் என்பவர் தனக்கு சாதி, மதம் அற்றவர் என சான்றிதழ் வழங்க வருவாய் துறைக்கு உத்தரவிட வேண்டும் என மனுத்தாக்கல் செய்திருந்தார் அந்த வழக்கு விசாரனையில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
Tags: தமிழக செய்திகள்
