Breaking News

நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வீட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை முழு விவரம் nia raid at ntk

அட்மின் மீடியா
0

தமிழ்நாடு முழுவதும் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் சாட்டை துரைமுருகன் உள்ளிட்டோர் வீட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை.!

தமிழ்நாடு முழுவதும் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வீட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றது என தகவல்கள் வெளியாகி உள்ளது

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கோவை மாவட்டத்தில் இரண்டு இடங்களில் என்ஐஏ சோதனை நடைபெற்று வருகிறது. திருச்சியில் ஒரு இடத்திலும், சிவகங்கையில் ஒரு இடத்திலும், தென்காசியில் ஒரு இடத்திலும், சென்னையில் ஒரு இடத்திலும் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்

யூடியூபில் பிரபலமான நாம் தமிழர் கட்சி பிரமுகரான சாட்டை துரைமுருகனின் திருச்சி வயலூர் சாலை சண்முகா நகரில் உள்ள இல்லத்தில் காலை முதலே என்ஐஏ அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

அதேபோல் தென்காசி மாவட்டம் ராயகிரி , நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் மதிவாணன்(39) வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே பகைவரை வென்றான் கிராமத்தில் உள்ள நாம் தமிழர் கட்சியை சேர்ந்த தென்னக விஷ்ணு என்ற யூடியூபர் வீட்டில் சோதனை நடத்தி வருகின்றனர். 

Tags: அரசியல் செய்திகள் தமிழக செய்திகள்

Give Us Your Feedback