Breaking News

குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யத் தவறிய பேஸ்புக், இன்ஸ்டா பகிரங்க மன்னிப்பு கேட்ட மார்க் ஜூக்கர்பெர்க் வீடியோ Mark Zuckerberg apologizes to families of children harmed online

அட்மின் மீடியா
0

பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யத் தவறியதற்காக பாதிக்கப்பட்ட குடும்பங்களிடம் மன்னிப்பு கோரினார் மெட்டா நிறுவனர் மார்க் ஜூக்கர்பர்க் அந்த வீடியோ தற்போது வைரல் ஆகின்றது

அமெரிக்காவில் சமூக வலைதளங்களால் குழந்தைகள் பாதிக்கப்படுவது தொடர்பாக செனட் சபையில் நடைபெற்ற விசாரணையின்போது மெட்டா நிறுவனம் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டிற்கு மன்னிப்பு கோரினார்

அமெரிக்காவில் சமூக வலைத்தளங்கள் மூலம் பெண்கள் மற்றும் இளைஞர்கள் பாதிக்கப்படுவது பெரும் பிரச்சனையாக மாறி வருகிறது.கடந்த ஆண்டில், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்களை அதிகரித்து வரும் மெட்டா உள்ளிட்ட முன்னணி சமூக வலைதளங்களுக்கு எதிராக பல்வேறு மாகாணங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 

இந்நிலையில் நேற்று அமெரிக்க செனட் சபையில் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான பல்வேறு பிரச்னைகள் குறித்து விசாரணை நடத்தப்பட்டது. இதில் மெட்டா, டிக் டாக், எக்ஸ் உள்ளிட்ட பல்வேறு முன்னணி இணையதள நிறுவனங்களின் தலைமை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

அப்போது, ​​பாதிக்கப்பட்ட குழந்தைகள் தொடர்பான காட்சி ஒளிபரப்பப்பட்டு, பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் தங்கள் குழந்தைகளின் நிலை குறித்து பேசினர். அப்போது பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரிடம் தனது நிறுவனத்தின் தவறுக்கு மன்னிப்பு கேட்டார்.

வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

https://www.youtube.com/watch?v=8yIsjUXk7AQ

Tags: வெளிநாட்டு செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback