Breaking News

தனியாருக்கு சொந்தமான பட்டா நிலத்தில் சிலை வைக்க அரசின் அனுமதி தேவையில்லை Madurai High Court

அட்மின் மீடியா
0

தனியாருக்கு சொந்தமான பட்டா நிலத்தில் சிலை வைக்க அரசின் அனுமதி தேவையில்லை எனவும் ஒரு தனி நபரின் நினைவாக சிலை வைப்பதை அரசு தடுக்கவோ, தலையிடவோ முடியாது எனஉயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த வேல் என்பவர் தனது பட்டா நிலத்தில் முத்துராமலிங்கத்தேவரின் வெண்கல சிலை வைக்க அனுமதி கோரி வழக்கு தொடர்ந்திருந்தார் அந்த வழக்கை விசாரித்த மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிமன்றம் தனியாருக்கு சொந்தமான இடத்தில் சிலை நிறுவ, காவல்துறை அனுமதி தேவையில்லை. ஒரு தனி நபரின் நினைவாக சிலை வைப்பதை, அரசு தடுக்கவோ, தலையிடவோ முடியாது. பொது வழிபாட்டுக்கான மத கட்டமைப்பை உருவாக்குவது எனில், மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback