Breaking News

உயிரியல் பூங்காவில் சீதா என்ற பெண்சிங்கத்துடன் அக்பர் என்ற ஆண்சிங்கம் ஒரே பகுதியில் அடைக்கப்பட்டதை எதிர்த்து கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் மனு Lioness Sita housed with lion Akbar at Bengal safari

அட்மின் மீடியா
0

உயிரியல் பூங்காவில் சீதா என்ற பெண்சிங்கத்துடன் அக்பர் என்ற ஆண்சிங்கம்  ஒரே பகுதியில் அடைக்கப்பட்டதை எதிர்த்து நீதிமன்றத்தில் மனு

 

சிலிகுரி உயிரியல் பூங்காவில் 'சீதா' என்ற பெண் சிங்கம் மற்றும் 'அக்பர்' என்ற ஆண் சிங்கத்தை ஒரே பகுதிக்குள் அடைத்து வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்குவங்க உயர்நீதிமன்றத்தில் அம்மாநில விஷ்வ இந்து பரிஷத் அமைப்பு மனு தாக்கல் செய்துள்ளது, மேலும் 'சீதா' சிங்கம் மற்றும் 'அக்பர்' சிங்கத்தை ஒரே இடத்தில் அடைப்பது இந்து மதத்தை அவமதிக்கும் விஷயம் என VHP அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளது

திரிபுராவில் உள்ள செபஹிஜாலா விலங்கியல் பூங்காவில்  இருந்து சில தினங்களுக்கு முன்பு ஒரு ஆண் சிங்கமும், பெண் சிங்கமும் சிலிகுரி உயிரியல் பூங்காவுக்கு கொண்டு வரப்பட்டன.அதில் ஆண் சிங்கத்தின் பெயர் அக்பர். பெண் சிங்கத்தின் பெயர் சீதா. இந்நிலையில், அந்த இரண்டு சிங்கங்களும் ஒரே பகுதியில் அடைக்கப்பட்டு பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன.பிப்ரவரி 13 ஆம் தேதி சிங்கங்கள் பூங்காவிற்கு வந்தவுடன் பெயர் மாற்றப்படவில்லை என்றும் வனத்துறை தெரிவித்துள்ளது.

மேற்கு வங்க மாநிலம் சிலிகுரியில் உள்ள உயிரியல் பூங்காவில் அக்பர் எனப் பெயரிடப்பட்டுள்ள ஆண் சிங்கத்துடன் சீதா எனப் பெயரிடப்பட்டிருக்கும் பெண் சிங்கத்தை ஒன்றாக அடைக்கக் கூடாது என்று நீதிமன்றத்தில் இந்து பரிஷத் அமைப்பு மனு தாக்கல் செய்திருப்பது கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது. மேலும் அக்பர் ஒரு முகலாயப் பேரரசராக இருந்ததாலும், வால்மீகியின் 'ராமாயணத்தில் ' சீதை ஒரு கதாப்பாத்திரம் என்பதாலும் , இந்துக் கடவுளாக மதிக்கப்படுவதாலும்இது தவறானது என அவர்கள் தெரிவித்துள்ளார்கள்மேலும் இந்த மனு நீதிபதி சவுகதா பட்டாச்சார்யா பெஞ்ச் முன் 16 பிப்ரவரி 2024 அன்று குறிப்பிடப்பட்டு பிப்ரவரி 20 அன்று விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது. மாநிலத்தின் வனத் துறை அதிகாரிகள் மற்றும் பெங்கால் சஃபாரி பூங்காவின் இயக்குனரும் இந்த வழக்கில் தரப்பினர் ஆக்கப்பட்டுள்ளனர்.

 NEWS SOURCE

https://www.livelaw.in/high-court/calcutta-high-court/vhp-moves-calcutta-high-courts-jalpaiguri-circuit-bench-over-lioness-named-sita-being-housed-with-lion-named-akbar-at-siliguri-safari-park-249761

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback