Breaking News

குமாரி ஆன்ட்டியின் சாலையோர உணவு கடையை காலி செய்த போலீசார் - மீண்டும் அதே இடத்தில் திறக்க உத்தரவிட்ட முதல்வர் ரேவந்த் ரெட்டி முழு விவரம் Kumari Aunty

அட்மின் மீடியா
0

குமாரி ஆன்ட்டியின் சாலையோர உணவு கடையை காலி செய்த போலீசார் - மீண்டும் அதே இடத்தில் திறக்க உத்தரவிட்ட முதல்வர் ரேவந்த் ரெட்டி முழு விவரம் Kumari Aunty

தெலங்கானாவில் சமூக வலைதள பிரபலமான குமாரியின் சாலையோர கடையைக் காவல்துறையினர் போக்குவரத்து காரணங்களால் மூடிய நிலையில், அவரது கடையை மூட வேண்டாம் என அம்மாநில முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்தவர் சாய் குமாரி. ஹைதராபாத்திலுள்ள மாதப்பூர் என்கிற இடத்தில் சாலையோர உணவகம் ஒன்றை நடத்துகிறார்

மதியம் மட்டும் செயல்படும் இக்கடையில் சிக்கன் வறுவல், சிக்கன் சில்லி, ஈரல், மட்டன் தலைக்கறி, மட்டன் குடல் கறி, மீன் வறுவல், மீன் தலைக் குழம்பு, முட்டை, நெய்சோறு, சாதம், அதுபோக 7 வகை சைவ கலவைச் சாதம் என உணவு பட்டியல் நீண்டு கொண்டே செல்கின்றது

இவரது கடைக்கு யூடியூப் மற்றும் சமூக வலைத்தளங்களில் விலாக் மற்றும் திரைப்பட நட்சத்திரங்கள் சென்று பதிவிட்டதால் குமாரி ஆன்ட்டி உணவு கடை பிரபலம் அடைந்தது. 

வாடிக்கையாளர்கள் அதிகரிக்க தொடங்கியதால்  அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதோடு கடைக்கு வருபவர்களின் வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்படுவதால் போக்குவரத்து போலீசார் சென்று இரண்டு தினங்களுக்கு முன்பு கடைக்கு சீல் வைத்து வாகனத்தை பறிமுதல் செய்து குமாரி மீது வழக்கு பதிவு செய்தனர். 

இந்த சம்பவம் வைரலான நிலையில் பல்வேறு யூடியூபர்கள், சமூக ஆர்வலர்கள், தன்னார்வலர்கள்,அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என சமூக வலைத்தளங்களில் குமாரி ஆண்ட்டி உணவு கடைக்கு ஆதரவு தெரிவித்து கடந்த 2 நாட்களாக பதிவு செய்து வந்தனர் இதனால் டிவிட்டரில் அவர் டிரண்டில் இருந்தார்

இந்த செய்தி தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியின் கவனம் சென்றது உடனடியாக அவர் குமாரி ஆண்டியின் கடை வழக்கம்  போல் அங்கு உணவு கடை அமைக்க அனுமதி அளிக்குமாறு போலீசாருக்கும் அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டுள்ளார்

இந்தநிலையில் போலீஸாரின் உத்தரவைத் திரும்பப் பெறும்படி மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி டிஜிபி மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சகத்துக்கும் புதன்கிழமை உத்தரவிட்டுள்ளார்.

வீடியோ பார்க்க:- இங்கு கிளிக் செய்யவும் 

https://twitter.com/Lalitha_KumariK/status/1752881246529884312

Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள்

Give Us Your Feedback