திருவாரூர் அருகே பள்ளிவாசல் திறப்பு விழாவிற்க்கு சீர்வரிசையோடு வந்த இந்து மக்கள் வைரல் வீடியோ kariyacheri mosque opening ceremony
அட்மின் மீடியா
0
திருவாரூர் அருகே பள்ளிவாசல் திறப்பு விழாவிற்க்கு சீர்வரிசையோடு வந்த இந்து மக்கள் வைரல் வீடியோ
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி தாலுகாவில் கடியாச்சேரி என்ற
பகுதியில் இஸ்லாமியர்கள் புதிதாக பள்ளிவாசல் ஒன்றை கட்டியுள்ளார்கள்.இந்த
பள்ளிவாசல் திறப்பு விழா கடியாச்சேரி பகுதியில் வெகு விமர்சையாக
நடைபெற்றது
திருவாரூர் மாவட்டத்தில் புதிதாக திறக்கப்பட்ட பள்ளிவாசலுக்கு அந்த பகுதியில் வசித்து வரும் இந்து மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து சீர்வரிசை எடுத்து சென்று வழங்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே கடியாச்சேரியில் இஸ்லாமியர்கள் புதிதாக பள்ளிவாசல் ஒன்றைக் காட்டியுள்ளனர். இதன் திறப்பு விழாவில், கலந்துகொள்ள சாதி மத பேதமின்றி ஊரில் உள்ள அனைவருக்கும் இஸ்லாமியர்கள் அழைப்பு விடுத்திருந்தனர். இந்த பள்ளிவாசல் திறப்பு விழா கடியாச்சேரி பகுதியில் வெகு விமர்சையாக நடைபெற்றது.
அவர்களின் அழைப்பை ஏற்று ஊரில் உள்ள மற்ற மதத்தினர் சீர்வரிசை எடுத்து வந்து
அசத்தினர்.
அதனைத் தொடர்ந்து சீர்வரிசை பள்ளி வாசலுக்கு வந்தவுடன் தங்கள்
உறவினர்களைப் போல ஒருவரை ஒருவர் கட்டி தழுவி அன்பை வெளிப்படுத்தினர்.
வீடியோ பார்க்க:-
https://www.youtube.com/watch?v=hmRHtBpmlIA
Tags: தமிழக செய்திகள் மார்க்க செய்தி