ஒரே இமெயில் ID மூலம் 13 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி - காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா பேட்டி முழு விவரம்
ஒரே இமெயில் ID மூலம் 13 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வதந்தி காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா விளக்கம்
இன்று சென்னை அண்ணா நகர், முகப்பேர், திருமழிசை பாரிமுனை, கோபாலபுரம், பட்டினம்பாக்கம், ஓட்டேரி, எழும்பூர், காட்டுப்பாக்கம், அடையாறு, வேளச்சேரிகளில் இயக்கும் சுமார் 13 தனியார் பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலம் அடையாளம் தெரியாத நபர்கள் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதில் கே.கே.நகர் பத்ம சேஷாத்ரி பள்ளி, கோபாலபுரம் டிஏவி ஆண், பெண்கள் பள்ளி,
திருமழிசை, முகப்பேர், அண்ணாநகரில் உள்ள சென்னை பப்ளிக் பள்ளி,
பாரிமுனையில் உள்ள செயிண்ட் மேரீஸ் பள்ளி, கீழ்ப்பாக்கத்தில் உள்ள பவன்ஸ்
வித்யாஸ்ரம் பள்ளி, ஆர்.ஏ.புரத்தில் உள்ள செட்டிநாடு வித்யாஸ்ரம் பள்ளி,
மேலும் சனா ஸ்மார்ட் பள்ளி என இந்த பட்டியல் உள்ளது
உடனடியாக பள்ளி குழந்தைகளின் பாதுகாப்பு கருதி, பள்ளி குழந்தைகளை பெற்றோர்
அழைத்து செல்லுமாறும் பள்ளிகள் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதன் காரணமாக,
பெற்றோர்கள் பள்ளி வாசலில் பதட்டத்துடன் காணப்பட்டனர்.
தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட பள்ளிகளில் மோப்பநாய் உதவியுடன் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த வெடிகுண்டு மிரட்டல் காரணமாக பொதுமக்களும் பெற்றோரும் அச்சமும் பீதியும் அடைய வேண்டாம் என காவல் துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.
இந்நிலையில் வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது தொடர்பாக கூடுதல் காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா அறிவித்துள்ளார்
மேலும் மின்னஞ்சலில் மிரட்டல் விடுத்த நபர் விரைவில் கைது செய்யப்படுவார் என தெரிவித்துள்ள காவல்துறை, பொதுமக்கள் அச்சம் அடைய வேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளது.
பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த கும்பலை கூண்டோடு கைது செய்ய வேண்டும் என சென்னை காவல் ஆணையருக்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவுறுத்தியுள்ளார்.
Tags: தமிழக செய்திகள்
