போலி பில் தயாரித்து வியாபாரம் செய்தால் GST பதிவு முடக்கப்படும் வணிக வரித்துறை எச்சரிக்கை
அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தும் வகையில் போலி பில் பட்டியல் தயாரித்து வணிகம் செய்வோர்களின் GST பதிவு முடக்கம் செய்து வருங்காலங்களில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் அவர்கள் உத்தரவு.
மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் திரு பி மூர்த்தி அவர்கள் தலைமையில் இன்று (09.02.2024) சென்னை நந்தனம் ஒருங்கிணைந்த வணிகவரி வளாகக் கூட்டரங்கில் 2024-ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கான அனைத்து இணை ஆணையர்களின் பணித்திறன் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தும் வகையில் போலி பில் பட்டியல் தயாரித்து வணிகம் செய்வோர்கள் மீது உரிய நடவடுக்கை எடுக்கவும். தொடர்ந்து முறைகேட்டில் ஈடுபடுவோர் கண்காணிக்கப்பட்டு அவர்களின் GST பதிவு முடக்கம் செய்யவும் மாண்புமிகு அமைச்சர் அவர்கள் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
மேலும், புதியதாக உருவாக்கப்பட்ட நிர்வாகக் கோட்டங்களின் மூலம் வரிவருவாய் அதிகரிக்க வேண்டும் என்பதை நினைவில் கொண்டு அனைத்து இணை ஆணையர்களும் வரிவருவாயை பெருக்க உரிய முறையில் செயலாற்றவும், அனைத்து நிறுவனங்களிலும் கூடுதல் சுவனம் செலுத்தி இணை ஆணையர்கள் உரிய நடவடிக்கை எடுத்து அரசு நிர்ணயித்த வருவாய் இலக்கினை அடையவேண்டும் என மாண்புமிகு அமைச்சர் அவர்கள் அறிவுறுத்தினார்கள்.
இக்கூட்டத்தில் அரசுச்செயலாளர் வணிகவரி திருமதி மற்றும் பதிவுத்துறை ஜோதி நிர்மலாசாமி இ.ஆ.ப. வணிகவரித்துறை ஆணையர் முனைவர் டி ஜகந்நாதன். இ.ஆ.ப, கூடுதல் ஆணையர் அதிக வரிச்செலுத்துவோர் பிரிவு இணை ஆணையர் நிர்வாகம் (மு.கூ.பொ) திருமதி. பி. உமா மகேஸ்வரி. .ஆ.ப. மற்றும் வணிகவரித்துறை உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
Tags: தமிழக செய்திகள்
