Breaking News

இந்தோனேசியா கால்பந்து போட்டியில் மின்னல் தாக்கி உயிரிழந்த வீரர் அதிர்ச்சி சிசிடிவி வீடியோ Footballer Septain Raharja Dies

அட்மின் மீடியா
0

இந்தோனேஷியாவில் சோகம் மைதானத்தில் கால்பந்து விளையாடிக் கொண்டிருந்தபோது மின்னல் தாக்கி உயிரிழந்த வீரர் சிசிடிவி வீடியோ


இந்தோனேசிய கால்பந்து வீரர் ஒருவர் விளையாடிக் கொண்டிருந்தபோது மின்னல் தாக்கிய பயங்கர வீடியோ விளையாட்டு உலகம் முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்தோனேசியாவை சேர்ந்த சுபாங்கைச் சேர்ந்தவர் செப்டைன் ரஹர்ஜா இவர் மேற்கு ஜாவாவின் பாண்டுங்கில் உள்ள சிலிவாங்கி ஸ்டேடியத்தில் சனிக்கிழமை நடந்த நட்பு ஆட்டத்தின் போது போட்டி நடந்து கொண்டிருந்ததுபோது  மின்னல் தாக்கி இறந்தார்.

35 வயதான செப்டைன் ரஹர்ஜா மின்னலால் தாக்கப்பட்ட  வீடியோ வைரலாகி வருகிறது.FLO FC பாண்டுங் மற்றும் FBI சுபாங் இடையே நட்பு கால்பந்து போட்டியில் பங்கேற்று கொண்டிருந்த போது, ​​உள்ளூர் நேரப்படி சனிக்கிழமை மாலை 4:20 மணியளவில் மின்னல் தாக்கியது என செய்திகள் வெளியாகி உள்ளது

இந்த வீடியோவில், மைதானத்தில் தனியாக நின்று பந்தின் வருகைக்காக வீரர் ஒருவர் காத்துக் கொண்டிருக்கிறார். மேலும் அவரிடம் பந்தை பாஸ் செய்ய மற்றொரு வீரர் ஆர்வமாக உள்ளார்.

அந்த சமயத்தில் தனியாக நின்று கொண்டிருந்த ஒரு வீரரை மின்னல் தாக்குகிறது. இதனால் அவர் கிழே விழுகிறார். அப்போது சக வீரர்கள் வேகமாக ஓடிச் சென்று அவரை பார்க்கின்றனர். அதன் பிறகு அவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்கின்றனர். ஆனால், அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். 


வைரல் வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

https://twitter.com/goleada_info/status/1757092071842746837

Tags: வெளிநாட்டு செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback