சென்னை மக்களே செம்மொழிப் பூங்காவில் மலர் கண்காட்சி பார்க்க மிஸ் பண்ணாதீங்க முழு விவரம் flower expo in Semmozhi Poonga
சென்னை மக்களே செம்மொழிப் பூங்காவில் மலர் கண்காட்சி பார்க்க மிஸ் பண்ணாதீங்க முழு விவரம்
கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சென்னை செம்மொழிப் பூங்காவில் 10 நாட்களுக்கு நடைபெறும் மலர் கண்காட்சியை அமைச்சர் உதயநிதி தொடங்கி வைத்தார்.
இதுதொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில்,
சென்னை மாநகரின் அழகிற்கு மேலும் அழகு சேர்க்கின்ற வகையில் செம்மொழிப் பூங்காவை முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் 2010-ம் ஆண்டில் திறந்து வைத்தார்கள்.மாநகரத்தின் முக்கிய அங்கமாக மாறியுள்ள பசுமைமிகு செம்மொழி பூங்காவில், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டை முன்னிட்டு 12 லட்சத்துக்கும் அதிகமான வண்ண மலர்களைக் கொண்டு அமைக்கப்பட்ட மலர்க்கண்காட்சியை இன்று தொடங்கி வைத்தோம்.
அலங்கார வளைவு - செங்குத்து தோட்டம் - யானை - அன்னப்பறவை என காண்போரை ஈர்க்கின்ற வகையில் 25 வகைகளிலான இந்த மலர்க்கண்காட்சியை பார்வையிட்டு மகிழ்ந்தோம்.சிறப்பான முறையில் இந்த மலர்க்கண்காட்சியை வடிவமைத்துள்ள வேளாண்மை - உழவர் நலத்துறை மற்றும் தோட்டக்கலை & மலைப்பயிர்கள் துறை அதிகாரிகள் - அலுவலர்களுக்கு வாழ்த்துகள்.செம்மொழிப் பூங்கா மலர்க்கண்காட்சியை சென்னை மக்கள் தவறவிடாதீர் என பதிவிட்டுள்ளார்
மலர் கண்காட்சியை முன்னிட்டு பல வகையான மலர்கள் செம்மொழி பூங்காவில் பூத்துக் குலுங்கி, ஊட்டி, கொடைக்கானல் சென்று வந்த அனுபவத்தைத் தர காத்திருக்கின்றன. காதலர்கள் தின வாரத்தில் செம்மொழி பூங்கா விதவிதமான ரோஜாக்களுடன் பூத்துக் குலுங்கி காத்திருக்கின்றன.
சென்னை அண்ணா மேம்பாலம் அருகே கடந்த 2010ல் செம்மொழி பூங்காவை அப்போதைய முதல்வர் கலைஞர் திறந்து வைத்தார்.இந்த பூங்காவில் ஏரளாமான மரங்கள், செடிகள், கொடிகள் என 500 க்கும் மேற்பட்ட தாவர வகைகள் உள்ளது. ஏற்கனவே செம்மொழிப் பூங்காவில் அரிய வகை மலர்களான மல்லிகை, செண்பகம், பாரிஜாதம், பவளமல்லிகை என வாசனை மிக்க மலர்கள் அடங்கிய நறுமணத் தோட்டம் பார்வையாளர்களை வசீகரித்து வருகிறது.
இதோடு மூலிகை செடிகளான துளசி, வசம்பு, குப்பைமேனி, இன்சுலின் செடி என உள்ளடக்கி, தனியே மூலிகைத் தோட்டமும் உண்டு. கூடவே போன்சாய் முறையில் வளர்க்கப்பட்ட ஆல், அரசு, மா, மாதுளை, கொய்யா, சப்போட்டா, நெல்லி, புளி, எலுமிச்சை மரங்கள் கொண்ட போன்சாய் தோட்டமும் பார்வையாளர்கள் கண்களுக்கு விருந்து படைக்கின்றது .
இந்நிலையில், சென்னை செம்மொழி பூங்காவில் மலர் கண்காட்சி தொடங்கியுள்ளது பார்வையாளர்களை வெருவாக கவரும் வகையில் கிருஷ்ணகிரி, கொடைக்கானல், குமரி, மதுரையில் இருந்து அரிய வகை மலர்கள் எடுத்துவரப்பட்டு பயன்படுத்தப்பட உள்ளது. சுமார் 10 லட்சம் மலர்கள் கண்காட்சியில் பயன்படுத்தப்பட உள்ளதாகவும், மலர் கண்காட்சி சுமார் ஒருவாரம் வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மலர் கண்காட்சி நுழைவுக் கட்டணமாக பெரியவர்களுக்கு ரூ.150, குழந்தைகளுக்கு ரூ.75 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது
Tags: தமிழக செய்திகள் முக்கிய செய்தி


