Breaking News

போராட்டத்தில் விவசாயி உயிரிழப்பு- டெல்லி விவசாயிகள் போராட்டம் தற்காலிக நிறுத்தம்! முழு விவரம் Farmers Protest 2024

அட்மின் மீடியா
0

பஞ்சாப்-ஹரியானா எல்லையில் போராட்டத்தின் போது ஒரு விவசாயி உயிர் இழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

விவசாயிகள் டெல்லியை நோக்கிய தங்கள் பேரணியை மீண்டும் தொடங்கினர். அப்போது பஞ்சாப்-ஹரியானா எல்லையில் ஏற்பட்ட போராட்டத்தில்  போராட்டத்தில் போலீசார் திடீரென தொடர்ந்து புகை குண்டுகளையும், ரப்பர் குண்டுகளாலும் தாக்கியதால் விவசாயிகள் போராட்டம் கலவரமானது. பலருக்கு காயம் ஏற்பட்டுள்ள நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டிருந்த 21 வயது விவசாயி சுப்கரன் சிங், போலீசார் வீசிய ரப்பர் குண்டுகளால் மயங்கி விழுந்தார். தலையில் பலத்த காயம் அடைந்த சுப்கரன் சிங்கை, உடன் இருந்தவர்கள் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.



இந்தத் தகவலை பாரதிய கிசான் சங்கத்தின் துணைத் தலைவர் குருவேந்தர் சிங் பாலு உறுதிப்படுத்தினார். போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் சுப்கரன் சிங் கொல்லப்பட்டதாகவும், அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

இதனிடையே ரப்பர் வெடிகுண்டு தாக்குதலில் சுப்கரன் சிங் பலியானதாக வெளியான தகவலை ஹரியானா காவல்துறை மறுத்துள்ளது.தொடரும் விவசாயிகள் போராட்டத்தால் டெல்லியில் பரபரப்பு"எங்களுக்கு கிடைத்த தகவலின்படி, போராட்டத்தில் விவசாயிகள் யாரும் உயிரிழக்கவில்லை. இது வெறும் வதந்தி. 2 போலீசார் மற்றும் ஒரு போராட்டக்காரர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்" என்று ஹரியானா காவல்துறை X தள பக்கத்தில் தெரிவித்துள்ளது. இந்நிலையில், விவசாயி உயிரிழந்ததாலும், பலர் காயமடைந்திருப்பதாலும் அடுத்த 2 நாட்களுக்கு போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக விவசாயிகள் சங்க தலைவர் அறிவித்துள்ளார்

நாடு முழுவதும் உள்ள 200க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்களைச் சேர்ந்த விவசாயிகள், அனைத்து பயிர்களுக்கும் குறைந்தபட்ச விலை நிர்ணயம்  விவசாயிகளுக்கு காப்பீடு ,விவசாயிகளின் கடன் ரத்து,சுவாமிநாதன் கமிஷன் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தவேண்டும், 2021 ம் ஆண்டு போராட்டத்தின் போது போடப்பட்ட வழக்குகள் வாபஸ் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி, டெல்லியில் இன்று 'டெல்லி சலோ' என்ற பெயரில் மாபெரும் போராட்டம் நடத்தி வருகின்றனர்

டெல்லியை நோக்கி பல்வேறு மாநிலங்களில் இருந்து அணி, அணியாக விவசாயிகள் பேரணியாக சென்றனர். ஒன்றிய அரசை கண்டித்து விவசாயிகள் டெல்லியை பேரணியாக செல்கின்றனர். 

 


விவசாயிகள் போராட்டத்தை தடுக்கும் வகையில், டெல்லி எல்லையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.விவசாயிகளின் பேரணியைத் தடுக்க டெல்லியை ஒட்டிய எல்லைப் பகுதிகளில் காங்கரீட், முள் வேலி தடுப்புகள் போடப்பட்டு, போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளன. மாநகராட்சி பகுதிகளில் டிராக்டர் நுழையவும் தடை விதித்துள்ளது. டெல்லி முழுவதும் அடுத்த ஒரு மாத காலத்திற்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. டெல்லியின் ஜரோடா எல்லை, சிங்கு எல்லை ஆகிய பகுதிகளில் சாலையில் பேரிகாட் மூலம் தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது. 

Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள்

Give Us Your Feedback