Breaking News

வெளிநாட்டு நாய்களின் இனப்பெருக்கத்துக்கு தடை - தமிழக அரசு வரைவு கொள்கை வெளியீடு DRAFT TAMIL NADU DOG BREEDING POLICY PDF DOWNLOAD

அட்மின் மீடியா
0

இந்திய தட்பவெப்ப நிலைக்கு ஒவ்வாத வெளிநாட்டு வகை நாய்களான Basset Hound, French Bulldog, Siberian Husky, Tibetan Mastiff உள்ளிட்ட 9 வகை நாய்களின் இனப்பெருக்கத்துக்கு தடை- தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள நாய்கள் இனப்பெருக்கம் தொடர்பான வரைவு கொள்கையில் அறிவிப்பு!

தமிழ்நாட்டில் 9 வெளிநாட்டு நாய்களின் இனப்பெருக்கத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.இந்திய தட்பவெப்ப நிலைக்கு ஒவ்வாத வெளிநாட்டு வகை நாய்கள் இனப்பெருக்கத்திற்கு தடை விதித்து வரைவுக்கொள்கை வெளியிடப்பட்டுள்ளது.


தமிழ்நாடு அரசு வெளியிட்ட நாய்கள் இனப்பெருக்கம் தொடர்பான வரைவு கொள்கைதமிழ்நாடு அரசு வெளியிட்ட நாய்கள் இனப்பெருக்கம் தொடர்பான வரைவு கொள்கைஇதன்படி Basset Hound, French Bulldog, Alaskan Malamute, Keeshond, Newfoundland, Norwegian Elkhound, Tibetan Mastiff, Siberian husky, Saint Bernard வகை நாய்களின் இனப்பெருக்கத்திற்கு தமிழ்நாடு அரசு தடை விதித்துள்ளது.

அனைத்து நாய் வளர்ப்பாளர்களும் பொறுப்பான முறையில் ‘நாய்கள் இனப்பெருக்க நடைமுறை’களை கடைபிடிக்க வேண்டும். மேலும் நாய்களின் உடல் மற்றும் மனநலம் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்யவேண்டும்.

தமிழ்நாடு விலங்குகள் நல வாரியம் (TNAWB) இனப்பெருக்கம் செய்யும் விலங்குகளின் ஆரோக்கியத்திற்கான சான்றிதழை வழங்கும். நாய்கள் வளர்ப்பவர்கள், இனப்பெருக்கம் செய்யப்படும் குறிப்பிட்ட இனம் குறித்து TNAWBல் பதிவு செய்ய வேண்டும். இனப்பெருக்கத்திற்குப் பயன்படுத்தப்படும் நாய்களை, கால்நடை மருத்துவரிடம் முறையாக காட்டவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

தமிழக அரசு வரைவு கொள்கை வெளியீடு PDF DOWNLOAD

https://cms.tn.gov.in/sites/default/files/documents/Draft_TN_Dog_Breeding_Policy.pdf

Dog breeds that cannot withstand in Indian environment

.Basset Hound,

French Bulldog

Alaskan Malamute

Alaskan Malamute

.Keeshond

Newfoundland

Norwegian Elkhound

Tibetan Mastat

Siberian Husky

Saint Bernard

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback