Breaking News

டெல்லி உயர்நீதிமன்றத்திற்க்கு வெடிகுண்டு மிரட்டல்.! பாதுகாப்பு தீவிரம் Delhi High Court threatening 'biggest bomb blast'

அட்மின் மீடியா
0

டெல்லி உயர்நீதிமன்ற வளாகத்தில் இன்று மிக பெரிய அளவில் வெடிகுண்டு வெடிக்கும் என மிரட்டல் வந்துள்ளது. இதனால் அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

டெல்லி உயர்நீதிமன்ற தலைமை பதிவாளரின் மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு இ- மெயில் வந்துள்ளது. அதில், இன்று (பிப்ரவரி 15) ஆம் தேதியன்று டெல்லி உயர்நீதிமன்ற வளாகத்தில் மிக பெரிய குண்டு வெடிக்கும் என்றும், எவ்வளவு பாதுகாப்பு அமைத்தாலும், அனைத்து அமைச்சர்களையும் வரவழைத்தாலும், அனைவரையும் வெடிகுண்டு வைத்து தகர்ப்போம் என அதில் குறிப்பிடப்பட்டு இருந்துள்ளது.

நேற்று மாலை இந்த மின்னஞ்சல் தலைமை பதிவாளர் முகவரிக்கு வந்துள்ளது. இதனை அடுத்து டெல்லி உயர்நீதிமன்றம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. வெடிகுண்டு நிபுணர்களை கொண்டு சோதனையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback