Breaking News

டெல்லி சலோ போராட்டம் விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டு வீசிய போலிசார் - போரட்ட வீடியோக்கள் இணைப்பு delhi chalo protest video

அட்மின் மீடியா
0

நாடு முழுவதும் உள்ள 200க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்களைச் சேர்ந்த விவசாயிகள், அனைத்து பயிர்களுக்கும் குறைந்தபட்ச விலை நிர்ணயம்  விவசாயிகளுக்கு காப்பீடு ,விவசாயிகளின் கடன் ரத்து,சுவாமிநாதன் கமிஷன் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தவேண்டும், 2021 ம் ஆண்டு போராட்டத்தின் போது போடப்பட்ட வழக்குகள் வாபஸ் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி, டெல்லியில் இன்று 'டெல்லி சலோ' என்ற பெயரில் மாபெரும் போராட்டம் நடத்தி வருகின்றனர்

டெல்லியை நோக்கி பல்வேறு மாநிலங்களில் இருந்து அணி, அணியாக விவசாயிகள் பேரணியாக சென்றனர். ஒன்றிய அரசை கண்டித்து விவசாயிகள் டெல்லியை பேரணியாக செல்கின்றனர். 

 


விவசாயிகள் போராட்டத்தை தடுக்கும் வகையில், டெல்லி எல்லையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.விவசாயிகளின் பேரணியைத் தடுக்க டெல்லியை ஒட்டிய எல்லைப் பகுதிகளில் காங்கரீட், முள் வேலி தடுப்புகள் போடப்பட்டு, போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளன. மாநகராட்சி பகுதிகளில் டிராக்டர் நுழையவும் தடை விதித்துள்ளது. டெல்லி முழுவதும் அடுத்த ஒரு மாத காலத்திற்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. டெல்லியின் ஜரோடா எல்லை, சிங்கு எல்லை ஆகிய பகுதிகளில் சாலையில் பேரிகாட் மூலம் தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது. 

பஞ்சாப் மாநிலம் பத்தேகர் சாகிப் என்ற இடத்தில் டிராக்டர்களில் விவசாயிகள் 5 பேரணியாக டெல்லி நோக்கில் செல்கின்றனர்.இதனால் பஞ்சாப், அரியானா, உத்தரப்பிரதேச மாநிலங்களில் இருந்து விவசாயிகள் குவிவதால் டெல்லி எல்லைகளில் பதற்றம் நிலவி வருகிறது.

மேலும் போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி விவசாயிகளை விரட்டி வருகின்றனர்.  ஆயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லிக்கு புறப்பட்டு வருகின்றனர்.இதன் காரணமாக டெல்லி-நொய்டா சில்லா எல்லையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டடுள்ளது. மேலும், டெல்லியில் விவசாயிகள் நடத்தும் பேரணியால் காஜிபூர் எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

CLICK HERE

CLICK HERE

CLICK HERE

CLICK HERE

CLICK HERE

CLICK HERE

https://twitter.com/poetvardhan/status/1757317247373025556

https://twitter.com/aitc_pintu/status/1757317598482665889

https://twitter.com/niayayakkural/status/1757279526499848348

https://twitter.com/rajlali/status/1757317108537671765 

https://twitter.com/mrs_roh08/status/1757094714791346414 

https://twitter.com/K16747985Amresh/status/1757314415958045136

Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback