Breaking News

சென்னை மாநகராட்சி மேயர் பிரியா சென்ற கார் விபத்தில் சிக்கியது.. காயமின்றி தப்பினார் chennai mayor car accident

அட்மின் மீடியா
0

பூவிருந்தவல்லி அருகே சென்னை மாநகராட்சி மேயர் பிரியாவின் கார் விபத்தில் சிக்கியது நல்வாய்ப்பாக மேயர் பிரியாவிற்கு காயம் எதுவும் ஏற்படவில்லை

சென்னை மாநகராட்சி மேயர் பிரியா சென்ற கார் விபத்தில் சிக்கியது.. காயமின்றி தப்பினார் 

சென்னை மாநகராட்சி மேயர் பிரியா இன்று பணி முடிந்து காரில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தபோது முன்னால் சென்ற கார் ஒன்று திடீரென வளைவில் திரும்பியது. இதனால் எதிர்பாராத விதமாக அந்த கார் மீது மேயர் பிரியா சென்ற கார் மோதியது. திடீரென இந்த காரும் நின்றதால், பின்னால் வந்த லாரி மேயர் பிரியாவின் காரின் மீது பின்பக்கமாக மோதியது.

எதிர்பாரத விதமாக அடுத்தடுத்து நடந்த விபத்தால் மேயர் பிரியா சென்ற காரின் டிரைவர் காயமடைந்தார். எனினும் மேயர் பிரியாவுக்கு எந்த வித காயமும் ஏற்படவில்லை. இதையடுத்து கார் டிரைவர் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். விபத்து தொடர்பாக போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

Tags: அரசியல் செய்திகள் தமிழக செய்திகள்

Give Us Your Feedback