Breaking News

சென்னை மாநகராட்சியின் பட்ஜெட் சிறப்பம்சங்கள் என்ன என்ன , முழு விவரம் Chennai Corporation Budget 2024

அட்மின் மீடியா
0

 சென்னை மாநகராட்சியின் 2024- 2025 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் பிப்ரவரி 21 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டு வருகின்றது.


பட்ஜெட் சிறப்பம்சங்கள்:-

  • சென்னை பள்ளி மாணவர்களுக்கு வண்ண அடையாள அட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்

  • மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு ஷூ, சாக்ஸ், 2 செட் சீருடைகள் வழங்க நடவடிக்கை

  • மாநகராட்சி பள்ளி மாணவர்களை கல்விச் சுற்றுலா அழைத்துசெல்ல ரூ.47 லட்சம் நிதி ஒதுக்கீடு 

  • 208 தொடக்க மற்றும் 130 நடுநிலை சென்னை பள்ளிகள் என மொத்தமுள்ள 338 பள்ளிகளுக்கு தலா ஐந்து பச்சை வண்ணப் பலகைகள் வழங்கப்படும்

  • 255 பள்ளிகளில் பள்ளி ஒன்றுக்கு 4 CCTV கேமராக்கள் பொருத்தப்படும்

  • திறமை மிக்க மாணாக்கர்களை தேர்வு செய்து அவர்களுக்கு STEM பயிற்சி வழங்குதல் .சென்னை நுங்கம்பாக்கம் மேல்நிலைப்பள்ளி SCIENCE TECHONOLOGY ENGINEERING MATHEMATICS (STEM) ACADEMY OF EXCELENCE பயிற்சி பள்ளி கடந்த 2021-2022 ஆம் கல்வி ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இத்திட்டம் நல்ல வரவேற்பினை பெற்றதனால், இத்திட்டத்தினை மேலும் விரிவுபடுத்தி 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணாக்கர்களுக்கு STEM பயிற்சி வழங்கப்படும்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback