சண்டிகர் மேயர் தேர்தலில் பாஜக வெற்றி செல்லாது, ஆம் ஆத்மி வெற்றி பெற்றதாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு முழு விவரம் chandigarh mayor election
சண்டிகர் மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி வேட்பாளர், மேயராக வெற்றி பெற்றதாக உச்ச நீதிமன்றம் அறிவிப்பு
8 வாக்குகளை செல்லாது என அறிவித்து பாஜகவை வெற்றி பெறச் செய்த தேர்தல் அதிகாரி அனில் மசிஹ் குற்றவாளி என்றும் தீர்ப்பு
ஆம் ஆத்மி வேட்பாளருக்கு ஆதரவாக விழுந்த 8 வாக்குகளை, தேர்தல் அதிகாரி திட்டமிட்டு செயலிழக்க முயற்சித்துள்ளார் என தெளிவாகிறது
தேர்தல் அதிகாரி அனில் மசிஹ்க்கு எதிராக 340 பிரிவின் கீழ் கிரிமினல் நடவடிக்கை எடுக்க மிகச்சரியான காரணங்கள் உள்ளன. அவருக்கு நோட்டீஸ் அனுப்பவும் நீதிபதிகள் அதிரடி உத்தரவு
சண்டிகர் மாநகராட்சி மேயர் தேர்தல் கடந்த ஜனவரி 30-ம் தேதி நடைபெற்றது. மேயர் தேர்தலில் பா.ஜனதா வேட்பாளராக மனோஜ் சோன்கர், இந்தியா கூட்டணி வேட்பாளராக ஆம் ஆத்மியின் குல்தீப் குமார் ஆகியோர் போட்டியிட்டனர்.
வாக்குச்சீட்டு முறைப்படி நடைபெற்ற தேர்தலில் மொத்தம் 36 கவுன்சிலர்கள் வாக்களித்தனர்.
இதில் காங்கிரஸ் - ஆம் ஆத்மி கூட்டணி வேட்பாளர் குல்தீப் சிங் 20 வாக்குகள் பெற்றார். பா.ஜனதா வேட்பாளர் மனோஜ் சோன்கர் 16 வாக்குகள் பெற்றார். ஆனால், ஆம் ஆத்மி வேட்பாளர் குல்தீப் குமார் பெற்ற 20 வாக்குகளில் 8 வாக்குகள் செல்லாது என தேர்தல் நடத்தும் அதிகாரி அறிவித்தார்.
இதன் மூலம் 16 வாக்குகள் பெற்ற பா.ஜனதா வேட்பாளர் மனோஜ் சோன்கர் வெற்றி பெற்றதாக தேர்தல் நடத்தும் அதிகாரி அறிவித்தார்.
8 வாக்குகள் செல்லாது என அறிவிக்கப்பட்டதற்கும், பா.ஜனதா வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதற்கும் ஆம் ஆத்மி, காங்கிரஸ் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
வாக்கு எண்ணிக்கையின்போது தேர்தல் நடத்தும் அதிகாரி முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறி, காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சி வீடியோ வெளியாகி பலரையும் அதிர்ச்சியில் உள்ளாக்கியது.
மேலும், தேர்தலில் முறைகேடு நடைபெற்றதாக கூறி பஞ்சாப்-அரியானா ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால் நீதிமன்றம் தடை விதிக்க மறுத்துவிட்டது
அதன் பின்பு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது அந்த வழக்கு இன்று விசாரனைக்கு வந்தது இந்த வழக்கில் சண்டிகர் மேயர் தேர்தல் ஜனநாயகத்தைக் கேலிக்கூத்தாகும் செயல் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கடும் கண்டனம் தெரிவித்தார்.
சண்டிகர் மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி வேட்பாளர், மேயராக வெற்றி பெற்றதாக உச்ச நீதிமன்றம் அறிவிப்பு
8 வாக்குகளை செல்லாது என அறிவித்து பாஜகவை வெற்றி பெறச் செய்த தேர்தல் அதிகாரி அனில் மசிஹ் குற்றவாளி என்றும் தீர்ப்பு
ஆம் ஆத்மி வேட்பாளருக்கு ஆதரவாக விழுந்த 8 வாக்குகளை, தேர்தல் அதிகாரி திட்டமிட்டு செயலிழக்க முயற்சித்துள்ளார் என தெளிவாகிறது
தேர்தல் அதிகாரி அனில் மசிஹ்க்கு எதிராக 340 பிரிவின் கீழ் கிரிமினல் நடவடிக்கை எடுக்க மிகச்சரியான காரணங்கள் உள்ளன. அவருக்கு நோட்டீஸ் அனுப்பவும் நீதிபதிகள் அதிரடி உத்தரவு
Tags: இந்திய செய்திகள்