சிகாகோவில் கொடூரமாக தாக்கப்பட்ட இந்திய மாணவர்! CCTV காட்சிகள்… Indian student attacked in Chicago
அமெரிக்காவில், வெஸ்லியான் பல்கலைகழகத்தில் படித்து வரும் இந்திய மாணவர் சையத் மசாஹிர் அலி,Syed Mazahir Ali சிகாகோவில் கொடூரமாக தாக்கப்பட்டுள்ளார் இதன் சிசிடிவி வீடியோ தற்போது வைரல் ஆகின்றது
ஹைதராபாத்தைச் சேர்ந்த சையத் மசாஹிர் அலி என்பவர் அமெரிக்கவில் உள்ள சிகாகோவில் உள்ள வெஸ்லியான் பல்கலைகழகத்தில் படித்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று சையத் மசாஹிர் அலி வெளியே சென்று விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது மறைந்திருந்த மர்ம நபர்கள் சையத் மசாஹிர் அலியை சரமாரியாக தாக்கி அவரிடமிருந்து பணம் மற்றும் மொபைல் போனை பறித்துச் சென்றுள்ளனர்
இதில் மாணவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அவரை அடையாளம் தெரியாத நபர்கள் துரத்திய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. இரத்த காயங்களுடன் மாணவரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது
வைரல் ஆகும் வீடியோவில்:-
சிகாகோவில் உள்ள இண்டியானா வெஸ்லியன் பல்கலைக்கழகத்தில் முதுகலை படித்து வரும் சையத் மசாஹிர் அலி ஆகிய நான் ஹைதராபாத்தை சேர்ந்தவன்."நான் வீட்டிற்கு உணவை எடுத்துச் சென்றபோது, நான்கு பேர் என்னை மூலையில் வைத்து, உதைத்து, குத்திவிட்டு, எனது தொலைபேசியுடன் ஓடிவிட்டனர். தயவுசெய்து எனக்கு உதவுங்கள்" என்று அலி ஒரு வைரல் வீடியோவில் கூறினார்.
சிகாகோவில் உள்ள இந்திய துணைத் தூதரகம் அவரது மனைவியுடன் தொடர்பு கொண்டு உதவி செய்வதாக உறுதியளித்துள்ளது.
இந்தியாவில் உள்ள சையத் மசாஹிர் அலி மற்றும் அவரது மனைவி சையது ருக்கியா பாத்திமா ரஸ்வி ஆகியோருடன் துணைத் தூதரகம் தொடர்பில் உள்ளது மற்றும் சாத்தியமான அனைத்து உதவிகளுக்கும் உறுதியளித்துள்ளது. இந்த வழக்கை விசாரித்து வரும் உள்ளூர் அதிகாரிகளையும் துணைத் தூதரகம் தொடர்பு கொண்டுள்ளது" என சிகாகோவில் உள்ள இந்திய துணைத் தூதரகம் 'எக்ஸ்' செய்தியில் தெரிவித்துள்ளது.
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்
https://twitter.com/krishna0302/status/1754856576555630935
தூதரகம் அறிவிப்பை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்
https://twitter.com/IndiainChicago/status/1754910520316944612
Tags: வெளிநாட்டு செய்திகள்
