Breaking News

மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் முக்கிய திட்டங்கள், சிறப்பம்சங்கள் முழு விவரம் Budget 2024 Live

அட்மின் மீடியா
0

நாடாளுமன்றத்தில் நேற்று குடியரசு தலைவர் உரையுடன் தொடங்கியது பட்ஜெட் கூட்டத்தொடர்.!

 


பிரதமர் மோடி தலைமையிலான இந்தியாவின் 17வது அமைச்சரவையின் பதவிக்காலம் இந்த ஆண்டு மே மாதத்துடன் நிறைவு பெறுகிறது. இதனை அடுத்து வரும் நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பு அடுத்த மாத இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் இடைக்கால பட்ஜெட்டாக உள்ளது. இதனை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து உள்ளார்.

இந்நிலையில் நேற்று நாடாளுமன்றத்தில் குடியரசு தலைவர் உரையுடன் தொடங்கியது பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியதுஅதனை தொடர்ந்து இன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்தார்.

மத்திய நிதியமைச்சராக ஆறாவது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நபராக நிர்மலா சீதாராமன் உள்ளார். 

தேர்தல் நெருங்கும் வேலை என்பதால் இந்த இடைக்கால பட்ஜெட்டில் மக்களுக்கான பல்வேறு அறிவிப்புகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் சிறப்பம்சங்கள் :-

  • கடந்த 10 ஆண்டுகளில் இந்திய பொருளாதாரம் வளர்ச்சிப் பாதையில் பயணிக்கிறது
  • விவசாயிகள், ஏழைகள், பெண்கள், இளைஞர்கள் என 4 பிரிவினருக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
  • நாடு முழுவதும் மின்சார வாகனங்களுக்கான பேட்டரி சார்ஜிங் மையங்கள் அதிகரிக்கப்படும் 
  • 40,000 சாதாரண ரயில் பெட்டிகள் ‘வந்தே பாரத்’ தரத்தில் புதுப்பிக்கப்படும்
  • அனைத்து மாநிலங்களுக்கும் வட்டியில்லாக் கடனாக ₹1.2 லட்சம் கோடி வழங்கப்படும்
  • நடுத்தர வர்க்கத்தினருக்கான வீடு கட்டும் திட்டம் விரைவில் அமல்படுத்தப்படும்

  • மேற்கூரைகளில் சூரிய ஒளி தகடு பொருத்தும் திட்டத்தின் கீழ், சுமார் 1 கோடி வீடுகளுக்கு 300 யூனிட் வரை இலவசமாக மின்சாரம் கிடைக்கும் வகையில் திட்டம் கொண்டுவரப்படும்
  • வருமான வரி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை, வருமான வரி செலுத்துவோருக்கு ஏற்கனவே இருந்த நடைமுறையே தொடரும்
  • 9-14 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு கர்ப்பப்பை புற்றுநோயை தடுப்பதற்கான தடுப்பூசி போடப்படும்
  • பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் அடுத்த 5 ஆண்டுகளில் கிராமப்புறங்களில் 2 கோடி வீடுகள் கட்டப்படும்
  • ஐடி இளைஞர்களுக்கு 50 ஆண்டுகளுக்கு வட்டியில்லா கடன் வழங்கப்படும்
  • தொழில் தொடங்க வட்டியில்லாக் கடன் வழங்குவதற்காக ₹1 லட்சம் கோடியில் புதிய நிதியம் அமைக்கப்படும்.
  • அங்கன்வாடி மற்றும் ஆஷா பணியாளர்களுக்கு ஆயுஷ்மான் பாரத் திட்டம் விரிவுபடுத்தப்படும்.
  • பால் உற்பத்தியை அதிகரிக்க புதிய திட்டம் செயல்படுத்தப்படும்

 

பட்ஜெட் 2024 லைவ் பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள்

Give Us Your Feedback