Breaking News

தெலுங்கானா பெண் எம்எல்ஏ கார் விபத்தில் உயிரிழப்பு முழு விவரம் BRS MLA Lasya Nanditha dies in car accident

அட்மின் மீடியா
0

பி.ஆர்.எஸ். கட்சியின் எம்.எல்.ஏ லாஸ்யா நந்திதா (37) கார் விபத்தில் உயிரிழந்தார்.

தெலுங்கானாவில் பாரத ராஷ்ட்ர சமிதி எம்.எல்.ஏ லாஸ்யா நந்திதா சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள படன்சேரு அருகே சுல்தான்பூர் ஓ.ஆர்.ஆர் பகுதியில் அம்மாநில பாரத ராஷ்ட்ர சமிதி (பிஆர்எஸ்) கட்சியின் எம்எல்ஏ.,வான லாஸ்யா நந்திதா காரில் பயணம் செய்துக்கொண்டிருந்தார். அப்போது கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே உள்ள தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயமடைந்த லாஸ்யா நந்திதா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.


கார் ஓட்டுநர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.ஏற்கனவே கடந்த 10 நாட்களுக்கு முன்பு நார்கட்பள்ளி அருகே செர்லபள்ளி என்ற இடத்தில் நடந்த சாலை விபத்தில் லாஸ்யா நந்திதா தப்பினார். அவர் பயணித்த கார் மீது ஆட்டோ மோதியதில், அவரது தலையில் காயம் ஏற்பட்டது. அடுத்த 10 நாட்களில் நடந்த விபத்தில் லாஸ்யா உயிரிழந்து சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள்

Give Us Your Feedback