Breaking News

மேற்கு வங்க மாநிலத்தில் ஜனாதிபதியை ஆட்சியை அமல்படுத்த தேசிய பட்டியலினத்தவர் ஆணையம் பரிந்துரை முழு விவரம்

அட்மின் மீடியா
0

மேற்கு வங்க மாநிலத்தில் சந்தேஷ்காலி வன்முறையால் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. மேலும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பிரமுகர் முகமது ஷேக்கிற்கு எதிராக பாலியல் புகார் குவிந்து வரும் நிலையில் மேற்கு வங்கத்தில் ஜனாதிபதி ஆட்சிக்கு தேசிய பட்டியலின ஆணையம் அதிரடியாக பரிந்துரை செய்துள்ளது. 


மேற்கு வங்காளத்தில் ஆளுங்கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவரான ஷேக் ஷாஜகானுக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டுகள் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளன. 

அவருக்கு எதிராக, வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டம் சந்தேஷ்காளி கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். ஷேக் ஷாஜகான் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தங்கள் நிலங்களை அபகரித்துக் கொண்டதாகவும் பாலியல் துன்புறுத்தல் செய்ததாகவும் மேலும் சம்பவம் குறித்து வெளியே கூறினால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என மிரட்டி உள்ளார். இதனால் பெண்கள் பயந்துபோய் இருந்தனர். 

இதற்கிடையே தான் கடந்த மாதம் ரேஷன் ஊழல் புகார் தொடர்பாக ஷாஜகான் ஷேக் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொள்ள சென்றனர். அப்போது அவரது ஆதரவாளர்கள் அமலாக்கத்துறை அதிகாரிகளை தடுத்து தாக்கி ஷாஜகான் ஷேக்கை தப்பிக்க வைத்தனர்.தற்போது ஷாஜகான் ஷேக் தலைமறைவாக உள்ளார். இதையடுத்து பெண்கள் அவர் மீது புகார் அளிக்க தொடங்கி உள்ளனர்.

இதனால் போராட்டம் விஸ்வரூபம் எடுத்தது. மேலும் அந்த பகுதியில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. இப்படி கடந்த ஒன்றரை மாதமாக அந்த பகுதியில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. மேலும் இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறை மற்றும் மகளிர் ஆணையம் விசாரணை நடத்துகின்றன. கவர்னர் நேரில் சென்று பெண்களிடம் விசாரித்ததுடன், நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதி அளித்தார்.

தேசிய பட்டியலினத்தவர் ஆணையத்தின் குழுவினரும் சந்தேஷ்காளி கிராமத்திற்கு சென்று ஆய்வு நடத்தினர். பாதிக்கப்பட்ட பெண்களிடம் விசாரணை நடத்தி அவர்களின் குற்றச்சாட்டுகளை பதிவு செய்தனர். அதன்பின்னர் பட்டியலினத்தவர் ஆணைய குழுவினர் ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் அறிக்கை சமர்ப்பித்தனர். அதில், மேற்கு வங்காள மாநிலத்தில் நிலைமை மோசமாக இருப்பதால் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தவேண்டும் என பரிந்துரை செய்யப்பட்டுள்ளது

Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள்

Give Us Your Feedback