Breaking News

வீடு தேடி தபால் மூலம் டிரைவிங் லைசென்ஸ் வரும் புதிய நடைமுறை அமல் முழு விபரம்

அட்மின் மீடியா
0

வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் (ஆர்.டி.ஓ.,) பெறப்படும் ஓட்டுனர் உரிமம் (டிரைவிங் லைசென்ஸ்) இனி விண்ணப்பதாரரின் வீடுகளுக்க்கு தபால் மூலம் அனுப்பப்படும்


வாகனங்களை ஓட்டுவதற்கான உரிமம் பெற ஆர்.டி.ஓ., அலுவலகத்திற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.அதில் குறிப்பிடும் நாள், நேரத்தில் அங்கு சென்று முதலில் ஓட்டுனர் பழகுநர் உரிமம் (எல்.எல்.ஆர்.,) அடுத்து ஒரு மாத இடைவெளிக்குப்பின் ஓட்டுனர் உரிமம் பெறலாம். காலையில் வாகன ஆய்வாளர் முன்பு ஓட்டிக் காட்டி, போட்டோ எடுத்துக் கொண்ட பின், மாலையில் ஓட்டுனர் உரிமத்தை நேரில் சென்று பெற வேண்டும். இதுவே தற்போதைய நடைமுறை.


இதில் புதிய நடைமுறையாக இனி ஓட்டுனர் உரிமம் விண்ணப்பதாரரின் வீடுகளுக்கு தபாலில் அனுப்பும் வசதி இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது. இதனால் விண்ணப்பதாரர் ஒருமுறை சென்று ஓட்டிக் காட்டி தேர்ச்சி அறிவித்த பின் ஓட்டுனர் உரிமம் பெற என அலையத் தேவையில்லை.இதற்காக வழக்கமான ஓட்டுனர் உரிம கட்டணமான ரூ.520 உடன், தபால் செலவுக்காக ரூ.50 கட்டணம் செலுத்த வேண்டும்.

இதே நடைமுறையில் ஓட்டுனர் உரிமம் புதுப்பித்தல் உரிமம், பதிவுச் சான்றிதழும் (ஆர்.சி., புக்) தபால் மூலமே வழங்கப்பட உள்ளது.விண்ணப்பத்தில் குறிப்பிடும் முகவரி தவறாக இருந்தாலோ, விண்


ணப்பதாரர் வீட்டில் இல்லையென்றாலோ ஓட்டுனர் உரிமம் ஆர்.டி.ஓ., அலுவலகத்திற்கே திரும்பி விடும். இச்சூழலில் விண்ணப்பதாரர் அதனைப் பெற அலுவலகத்திற்கு சென்று சரியான சுயவிலாசம் எழுதிய தபால் உறையை அலுவலகத்தில் கொடுக்க வேண்டும். அதனை மீண்டும் வீட்டு முகவரிக்கே அனுப்பி வைப்பார்கள்

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback