Breaking News

செயின்ட் தாமஸ் மவுண்ட் இரயில் மெட்ரோ பணி காரணமாக போக்குவரத்து மாற்றம் முழு விவரம்

அட்மின் மீடியா
0

சென்னை பெருநகர போக்குவரத்து காவல் 

சென்னை மெட்ரோ இரயில் பணி செயின்ட் தாமஸ் மவுண்ட் இரயில் நிலையத்தில் நடைபெற உள்ளதால் அப்பிரதான சாலையில் செய்யப்பட்டுள்ள போக்குவரத்து மாற்றம்

சென்னை மெட்ரோ இரயில் கட்டுமானப் பணிகள் செயின்ட் தாமஸ் மவுண்ட் இரயில் நிலையத்தில் நடைபெற உள்ளதால், இப்பணிகளைக் கருத்தில் கொண்டு செயின்ட் தாமஸ் மவுண்ட் பகுதிகளில் பின்வரும் போக்குவரத்து மாற்றங்கள் வருகின்ற 21.02.2024 முதல் ஒரு வார காலத்திற்கு சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்படும்.


GST சாலையில் இருந்து வரும் வாகனங்கள் வழக்கம் போல் ஆலந்தூர் சுரங்கப்பாதையை நோக்கி இடதுபுறமாக செல்லலாம். இந்த சாலையில் கனரக வாகனங்கள் மட்டும் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

►MKN ரோடு மற்றும் ரயில் நிலைய சாலை சந்திப்பில் இருந்து வரும் வாகனங்கள் நேராக மவுண்ட் போஸ்ட் ஆபிஸ் நோக்கி செல்ல அனுமதி இல்லை.

►ஆலந்தூர் சுரங்கப்பாதையில் இருந்து வரும் வாகனங்கள் GST சாலையில் செல்வதற்கு வலதுபுறமாகவோ அல்லது இடப்புறமாகவோ செல்லலாம்.

வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

                  

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback