பாஜகவில் இருந்து விலகிய நடிகை கவுதமி அதிமுகவில் இணைந்தார் முழு விவரம்
பாஜகவில் இருந்து விலகிய நடிகை கவுதமி அதிமுகவில் இணைந்தார் முழு விவரம்
நடிகை கவுதமி கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்து இருந்தார். இந்நிலையில், நடிகை கவுதமி அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமியை சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அலுவலகத்தில் சந்தித்து அதிமுகவில் இணைத்துக் கொண்டார்.
நடிகை காயத்ரி ரகுராம் கடந்த ஜனவரி மாதம் 19-ம் தேதி எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அதிமுகவில் இணைந்தார். நடிகை காயத்ரி ரகுராம் அண்ணாமலையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பாஜக-வில் இருந்து விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி முஸ்லீம் ராஷ்ட்ரிய மஞ்ச் மாநிலத் தலைவர் , முன்னாள் பாஜக சிறுபான்மை மோர்ச்சா மாநில செயலாளர் பாத்திமா அலி அவர்கள் முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் இன்று அதிமுகவில் இணைந்தார்.
அதிமுகவில் இணைந்த பாத்திமா அலி
Tags: அரசியல் செய்திகள் தமிழக செய்திகள்

