தமிழ்நாட்டில் முதல்முறையாக ரெயில்வே டிக்கெட் பரிசோதகராக திருநங்கை நியமனம் முழு விபரம்
அட்மின் மீடியா
0
திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் டிக்கெட் பரிசோதகராக திருநங்கை சிந்து நேற்று பதவி ஏற்றுள்ளார்
இதுதொடர்பாக சிந்து கூறுகையில்
எனது சொந்த ஊர் நாகர்கோவில் நான் கடந்த 19 ஆண்டுகளுக்கு முன்பு கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் ரெயில்வே பணியில் சேர்ந்தேன். தற்போது திண்டுக்கல்லுக்கு மாறுதலாகி தற்போது ரெயில்வே மின்சார பிரிவில் பணியாற்றினேன். விபத்தில் ஏற்பட்ட காயம் காணமாக மின்சார பிரிவில் இருந்து வணிக பிரிவுக்கு மாற்றப்பட்டேன்.
மேலும் டிக்கெட் பரிசோதகர் பயிற்சியை முடித்து இன்று பதவி ஏற்றுள்ளேன். இது எனது வாழ்நாளில் மறக்க முடியாத நிகழ்வு ஆகும் என தெரிவித்துள்ளார்
Tags: தமிழக செய்திகள்