சென்னையில் பிரபல தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் பள்ளிகளுக்கு விடுமுறை
சென்னையில் பிரபல தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் பள்ளிகளுக்கு விடுமுறை
சென்னை அண்ணாநகர், ஜே ஜே நகர் மற்றும் பாரிமுனையில் உள்ள நான்கு தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. மின்னஞ்சல் மூலம் அடையாளம் தெரியாத நபர்கள் பள்ளிகளுக்கு மிரட்டல் விடுத்துள்ளனர்.
உடனடியாக பள்ளி குழந்தைகளின் பாதுகாப்பு கருதி, பள்ளி குழந்தைகளை பெற்றோர்
அழைத்து செல்லுமாறும் பள்ளிகள் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதன் காரணமாக,
பெற்றோர்கள் பள்ளி வாசலில் பதட்டத்துடன் காணப்பட்டனர்.
தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட பள்ளிகளில் மோப்பநாய் உதவியுடன் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த வெடிகுண்டு மிரட்டல் காரணமாக பொதுமக்களும் பெற்றோரும் அச்சமும் பீதியும் அடைய வேண்டாம் என காவல் துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர். இந்த பள்ளிகள் இருக்கும் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
Tags: தமிழக செய்திகள்
