Breaking News

சண்டிகர் மேயர் தேர்தல் முறைகேடு தேர்தல் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்றம் உத்தரவு Chandigarh- Mayor Election tamil

அட்மின் மீடியா
0

சண்டிகர் மேயர் தேர்தலில் தேர்தல் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்றம் உத்தரவு. 


சண்டிகர் மாநகராட்சி மேயர் தேர்தல் கடந்த ஜனவரி 30-ம் தேதி நடைபெற்றது. மேயர் தேர்தலில் பா.ஜனதா வேட்பாளராக மனோஜ் சோன்கர், இந்தியா கூட்டணி வேட்பாளராக ஆம் ஆத்மியின் குல்தீப் குமார் ஆகியோர் போட்டியிட்டனர். 

வாக்குச்சீட்டு முறைப்படி நடைபெற்ற தேர்தலில்  மொத்தம் 36 கவுன்சிலர்கள் வாக்களித்தனர்.

இதில் காங்கிரஸ் - ஆம் ஆத்மி கூட்டணி வேட்பாளர் குல்தீப் சிங் 20 வாக்குகள் பெற்றார். பா.ஜனதா வேட்பாளர் மனோஜ் சோன்கர் 16 வாக்குகள் பெற்றார். ஆனால், ஆம் ஆத்மி வேட்பாளர் குல்தீப் குமார் பெற்ற 20 வாக்குகளில் 8 வாக்குகள் செல்லாது என தேர்தல் நடத்தும் அதிகாரி அறிவித்தார். 

இதன் மூலம் 16 வாக்குகள் பெற்ற பா.ஜனதா வேட்பாளர் மனோஜ் சோன்கர் வெற்றி பெற்றதாக தேர்தல் நடத்தும் அதிகாரி அறிவித்தார்.

8 வாக்குகள் செல்லாது என அறிவிக்கப்பட்டதற்கும், பா.ஜனதா வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதற்கும் ஆம் ஆத்மி, காங்கிரஸ் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். 

வாக்கு எண்ணிக்கையின்போது தேர்தல் நடத்தும் அதிகாரி முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறி, காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சி வீடியோ வெளியாகி பலரையும் அதிர்ச்சியில் உள்ளாக்கியது.

மேலும், தேர்தலில் முறைகேடு நடைபெற்றதாக கூறி பஞ்சாப்-அரியானா ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால் நீதிமன்றம் தடை விதிக்க மறுத்துவிட்டது 

அதன் பின்பு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது அந்த வழக்கு  இன்று விசாரனைக்கு வந்தது  இந்த வழக்கில் சண்டிகர் மேயர் தேர்தல் ஜனநாயகத்தைக் கேலிக்கூத்தாகும் செயல் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கடும் கண்டனம் தெரிவித்தார்

சண்டிகர் மேயர் தேர்தல் நடந்த விதம் ஜனநாயகத்தைக் கேலிக்கூத்தாகும் செயல்வாக்குச் சீட்டுகளைச் சிதைத்த தேர்தல் நடத்திய அதிகாரியை விசாரிக்க வேண்டும்

இதை ஜனநாயகத்தைப் படுகொலை செய்யும் செயலாகவே பார்க்கிறோம் என  உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்திருந்தது

மேலும் அரசு வழக்கறிஞரிடம் அந்த தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் சொல்லுங்கள் உச்சநீதிமன்றம் அவரை பார்த்துக் கொண்டிருக்கிறது” என்று கூறிய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி இந்த விவகாரத்தில் உயர்நீதிமன்றம் முறையான இடைக்கால உத்தரவை பிறப்பிக்க தவறிவிட்டது. என கூறினார்’

மேலும் இவ்விவகாரத்தில் எங்களது அனைத்து சந்தேகங்களுக்கும் பதிலளிக்க வேண்டும். பதில் திருப்தி அளிக்கவில்லை என்றால் மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும் எனவும் மேயர் தேர்தல் நடத்தப்பட்ட அனைத்து வீடியோ பதிவுகளையும் பாதுகாக்க வேண்டும். என்று கூறிய நீதிபதி அடுத்த உத்தரவு வரும் வரை சண்டிகர் மாநகராட்சி கூட்டம் நடத்தக் கூடாது என உத்தவிட்டார்

இந்நிலையில் இந்த வழக்கை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம் சண்டிகர் மேயர் தேர்தலில் தில்லுமுல்லு செய்த தேர்தல் அதிகாரி அனில் மஸியை நேரில் அழைத்து உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. 

எந்தக் கட்சியையும் சாராத புதிய தேர்தல் நடத்தும் அதிகாரியை நியமிக்க உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது.

மேலும், வாக்குச்சீட்டில் குறியிடும் போது கேமராவை பார்த்து என்ன செய்தீர்கள் என்று தேர்தல் அதிகாரிக்கு தலைமை நீதிபதி சரமாரி கேள்வி எழுப்பியுள்ளார். 

உயர்நீதிமன்றத்தின் மேற்பார்வையில் வாக்குச்சீட்டுகளை எண்ணி முடிவை அறிவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

சண்டிகர் மேயர் தேர்தல் வாக்குச்சீட்டுகளுடன் உயர்நீதிமன்ற பதிவாளர் நாளை ஆஜராக வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவில் தெரிவித்துள்ளது. 

தேர்தல் நடைமுறையில் தலையிட்ட தேர்தல் அதிகாரி மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவில் குறிப்பிட்டுள்ளது

மேலும், சண்டிகரில் புதியதாக தேர்தல் நடத்த வேண்டிய அவசியமில்லை. நாளை அனைத்து வாக்குச்சீட்டுகளையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய அவர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள்

Give Us Your Feedback