Breaking News

சென்னையில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளுக்கும் நாளை விடுமுறை.. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

அட்மின் மீடியா
0

சென்னையில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளுக்கும் நாளை விடுமுறை.. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

அரசு பள்ளிகளில் நாளை NMMS தேர்வு நடைபெற இருப்பதால் இந்த உத்தரவை கல்வித்துறை பிறப்பித்துள்ளது. நாடு முழுவதும் மத்திய கல்வித்துறை சார்பில் ஒவ்வொரு ஆண்டும் தேசிய வருவாய்‌ வழி மற்றும்‌ திறன் படிப்பு உதவி திட்டத்‌ தேர்வு (NMMS) நடத்தப்பட்டு வருகிறது.

இதன் மூலம் ஒரு லட்சம் பேருக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டிற்கான தகுதித் தேர்வு நாளை நடைபெற இருக்கிறது. சென்னை, செங்கல்பட்டு மற்றும் காஞ்சிரத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் தேர்வு நடைபெறுகிறது. 

இதன் காரணமாக நாளை இம்மூன்று மாவட்டங்களிலும் உள்ள அரசு பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக, பிப்ரவரி 10ம் தேதி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள அரசு பள்ளிகள் செயல்படவுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வெளியிட்டுள்ளார்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback