பொது சிவில் சட்டத்தால் அத்தை ,மாமன் முறை மகன் - மகளை உத்ரகாண்டில் திருமணம் செய்ய முடியாது முழு விவரம்
உத்தரகாண்டில் இனி அத்தை / மாமன் முறை மகன் - மகளை’ திருமணம் செய்ய முடியாது!
நாட்டிலேயே முதல் மாநிலமாக உத்தரகாண்ட் மாநிலம் பொது சிவில் சட்டத்தை அமலுக்கு கொண்டு வந்த சட்டங்களில் சில மாற்றங்களை செய்துள்ளது. அதன் படி தான் தற்போது அம்மாநிலத்தில்,இனி ‘அத்தை / மாமன் முறை மகன் - மகளை’ திருமணம் செய்ய முடியாது என்ற சட்டமும் அமலுக்கு வந்துள்ளது.
பா.ஜ.க. நாடு முழுவதும் பொது சிவில் சட்டம் (Uniform Civil Code) அமல்படுத்தும் முயற்சியில் உள்ளது,இந்நிலையில் இந்தியாவில் முதன்முறையாக உத்தரகாண்ட் மாநிலத்தில் பொது சிவில் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அதில் அத்தை/மாமன் மகளை திருமணம் செய்து கொள்ள முடியாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அதில் தடை செய்யப்பட்ட உறவின் முறைகளை பட்டியல் இட்டுள்ளது அவை பின் வருமாறு
அதில் தடைவிதிக்கப்பட்ட உறவின்முறை:-
1. தாய் 2. வளர்ப்புத்தாய் 3. தாயாரின் தாய் 4. வளர்ப்பு பாட்டி 5. பூட்டி 6. வளர்ப்பு பாட்டியின் தாயார் 7. அம்மாவுடைய அப்பாவின் தாயார் 8. தந்தையின் தாயார் 9. அப்பா, அம்மா வழி பாட்டி 10. அப்பா, அப்பா வழி பாட்டி 11. மகள் 12. மகனின் விதவை மனைவி 13. மகளின் மகள் (பேத்தி) 14. மகளுடைய மகனின் விதவை மனைவி 15. மகனின் மகள் 16. மகனுடைய மகனின் விதவை மனைவி 17. மகளுடைய மகளின் மகள் 18. மகளுடைய மகளின் மகனுடைய விதவை மனைவி 19. மகளுடைய மகனின் மகள் 20. மகளுடைய மகனின் மகனுடைய விதவை மனைவி 21. மகளுடைய மகளின் மகள் 22. மகனுடைய மகளின் மகனுடைய விதவை மனைவி 23. மகளுடைய மகனின் மகள் 24. சகோதரி 25. சகோதரியின் மகள் 26. சசோதரனின் மகள்27. அம்மாவின் சகோதரி 28. அப்பாவின் சகோதரி 29. அப்பாவின் சகோதரர் மகள்30. தந்தையின் சகோதரியின் மகள் 31. தாயாரின் சகோதரியின் மகள் 32. தாயாரின் சகோதரியின் மகள்
Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள்
