விஜயதாரணியை தகுதிநீக்கம் செய்ய சபாநாயகருக்கு கோரிக்கை செல்வப்பெருந்தகை
விஜயதாரணியை தகுதிநீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த விளவங்கோடு எம்எல்ஏ விஜயதாரணி இன்று பாஜகவில் இணைந்துள்ளார்
மக்களவை தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்ததற்கு காங்கிரஸ் மேலிடம் மறுப்பு எனக் கூறப்படுகிறது. சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பங்கேற்காமல் கடந்த சில நாட்களாக டெல்லியில் முகாமிட்டு இருந்தார்
இந்நிலையில் டெல்லியில் மத்திய இணை அமைச்சர் எல் முருகன் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார் விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் விஜயதாரணி. கடந்த 2 வாரங்களாக டெல்லியில் முகாமிட்டிருந்த நிலையில் இன்று பாஜகவில் இணைந்தார் விஜயதரணி.
விஜயதாரணி விளவங்கோடு தொகுதியில் கடந்த 2011 முதல் தொடர்ந்து 3 முறை வெற்றி பெற்று இருக்கிறார்.
தேசிய விநாயகம் பிள்ளையின் கொள்ளு பேத்தியான விஜயதாரணி, காங்கிரஸ் கட்சியில் பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்தார்.
கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாகவே இவர் கட்சி மாறப் போகிறார் என்பதாகத் தகவல்கள் பரவிவந்தன. காங்கிரஸ் தரப்பில் மறுப்புகள் தெரிவிக்கப்பட்டு வந்தபோதிலும் விஜயதாரணி தரப்பிலிருந்து எவ்வித மறுப்பும் வராத நிலையில், இன்று அவர் பாஜகவில் தன்னை இணைத்துக்கொண்டுள்ளார்.
இந்த நிலையில், விஜயதாரணியை தகுதிநீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
மேலும் விஜயதாரணியை சட்டமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்ய சபாநாயகருக்கு கடிதம் கொடுக்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார். பாஜகவில் இணைந்த விஜயதாரணி காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
Tags: அரசியல் செய்திகள்
