Breaking News

அதிக கட்டணம் வசூல் செய்யும் பேருந்துகளின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும்! உயர் நீதிமன்றம்

அட்மின் மீடியா
0

அதிக கட்டணம் வசூல் செய்யும் தனியார் பேருந்துகளின் உரிமத்தை சஸ்பெண்ட் செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தென் மாவட்டங்களுக்கு பண்டிகை காலங்களில் இயக்கப்படும் ஆம்னி பேருந்துகளில் அதிகமாக கட்டணம் வசூல் செய்யப்படுவதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக பயணிகள் தரப்பில் புகார் அளிக்கப்படும் நிலையில், போக்குவரத்து துறை தரப்பிலும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. 



இந்நிலையில் இது குறித்த வழக்கு ஒன்றில்அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பேருந்துகளுக்கு அபராதம் விதித்தால் மட்டும் தீர்வு ஏற்படாது. பேருந்து உரிமத்தை சஸ்பெண்ட் செய்வது உள்ளிட்ட கடும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்என தமிழ்நாடு அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback