Breaking News

இந்திய தேசிய லோக்தள கட்சித் தலைவர் சுட்டுக்கொலை! ஹரியானாவில் பரபரப்பு!

அட்மின் மீடியா
0

ஹரியானாவில் இந்திய தேசிய லோக்தள் கட்சியின் தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான நஃபே சிங், ஜாஜ்ஜார் மாவட்டத்தில் காரில் சென்று கொண்டிருந்த போது பஹதுர்கர் என்ற இடத்தில் செல்லும் போது திடீரென வழிமறித்த மர்ம கும்பலால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். 

அவருடன் காரில் பயணித்த கட்சி நிர்வாகி ஜெய்கிஷன் என்பவரும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். மேலும் இந்த துப்பாக்கிச் சூட்டில் பாதுகாப்பு அலுவலர்கள் 2 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய பிறகு தாக்குதல் நடத்தியவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.இந்த சம்பவம் ஹரியானாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-

https://twitter.com/SachinGuptaUP/status/1761738556098130165

Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள்

Give Us Your Feedback