பாஜக கூட்டணியில் பெரம்பலூர் தொகுதியில் போட்டி - பாரிவேந்தர் அறிவிப்பு
பாஜக கூட்டணியில் பெரம்பலூர் தொகுதியில் போட்டி - பாரிவேந்தர் அறிவிப்பு
தமிழகத்தில் திமுக, கூட்டணியில் உள்ள காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், விசிக, மதிமுக, இந்திய யூனியன் முஸ்லிம்லீக், கொமதேக உள்ளிட்ட கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
அதில் திமுகவும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு ராமநாதபுரம் தொகுதியையும், கொமதேக கட்சிக்கு நாமக்கல் தொகுதியையும் அறிவித்து உள்ளது.
மேலும் அதிமுக கூட்டணியை பலப்படுத்தும் நோக்கில் செயல்படுத்தி வருகிறது.
மற்றொரு புறம் பாஜக பாமக, தேமுதிக , தமாக, புதிய நீதிக்கட்சி, இஜக ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைக்க பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது.
இந்நிலையில் பாஜக கூட்டணியில் பெரம்பலூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடவுள்ளதாக இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனத் தலைவர் பாரிவேந்தர் அறிவித்துள்ளார்.
பெரம்பலூர், கள்ளக்குறிச்சி ஆகிய தொகுதிகளை பாஜகவிடம் கேட்டுள்ளோம். பிரதமர் மோடியின் பொதுக்கூட்டம் முடிந்த பின்னர் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சு வார்த்தை நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளார்.
அதேபோல் வேலூர் தொகுதியில் தாமரை சின்னத்தில் போட்டியிடப்போவதாக புதிய நீதிக்கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் தெரிவித்துள்ளது குறிப்ப்டத்தக்கது
Tags: அரசியல் செய்திகள்
