Breaking News

தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்த அனைத்து கட்சிகளும் கோரிக்கை தலைமை தேர்தல் ஆணையர்

அட்மின் மீடியா
0

தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்துமாறு அனைத்து கட்சிகளும் கோரிக்கை வைத்துள்ளதாக இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் கூறியுள்ளார்.


எதிர்வரும் மக்களவை தேர்தலுக்குக்காக அங்கீகரிகப்பட்ட கட்சிகளுடன் சென்னையில் 2 நாட்கள் நடைபெற்ற ஆலோசனைக்குப் பிறகு இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது

தமிழ்நாட்டில் 2024ம் ஆண்டின் முதல் முறை வாக்காளர்களாக 5.26 லட்சம் பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்துமாறு அனைத்து கட்சிகளும் கோரிக்கை வைத்துள்ளன. 

பணப்பட்டுவாடா செய்யும் கட்சியின் வேட்பாளரை தகுதிநீக்கம் செய்யவும் கோரிக்கை வைத்துள்ளன. வாக்குகளுக்கு பணம் கொடுப்பது உள்ளிட்ட விதிமீறல்களை தடுக்க C-Vigil செயலியில் புகார் அளிக்கலாம். 

ஒவ்வொரு புகார் மீதும் 100 நிமிடங்களில் நடவடிக்கை எடுக்கப்படும். தமிழ்நாட்டில் 68,144 வாக்குச்சாவடிகள் உள்ளன.தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்துமாறு அனைத்து கட்சிகளும் கோரிக்கை வைத்துள்ளன. 

தமிழ்நாட்டில் 6.19 கோடி வாக்காளர்கள் உள்ளனர். 22 - 29 வயதுடைய வாக்காளர்கள் 1.08 கோடி பேர் உள்ளனர். ️தேர்தலின்போது பணப்பட்டுவாடா செய்யும் கட்சியின் வேட்பாளரை தகுதிநீக்கம் செய்ய பல்வேறு கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழ்நாட்டில் 2024ம் ஆண்டின் முதல் முறை வாக்காளர்கள் 5.26 லட்சம் பேர் சேர்க்கப்பட்டுள்ளனர் என கூறினார்ர்.

Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள் தமிழக செய்திகள்

Give Us Your Feedback