Breaking News

அதிமுக கூட்டணிக்காக பாஜக கதவுகள் திறந்தே உள்ளன அமித்ஷா அறிவிப்பு

அட்மின் மீடியா
0

அதிமுக கூட்டணிக்காக பாஜக கதவுகள் திறந்தே உள்ளன. தமிழ்நாட்டில் யாருடன் கூட்டணி | என்பது குறித்து தொடர்ந்து ஆலோசித்து வருகிறோம் என உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்

பாஜகவுடன் கூட்டணி எக்காலத்திலும் கிடையாது என அதிமுக திட்டவட்டமாக தெரிவித்துவரும் நிலையில், அமித்ஷாவின் கருத்தால் அரசியலில் பரபரப்பு


அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்களான பொன்னையன், ஜெயக்குமார், கே.பி. முனுசாமி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பாஜகவுடன் கூட்டணி கிடையாது என திட்டவட்டமாக கூறி வருகின்றனர். 

இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டியில் தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் கூட்டணி தொடர்பான கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், ‘அதிமுக கூட்டணிக்காக பாஜக கதவுகள் திறந்தே உள்ளன. தமிழ்நாட்டில் யாருடன் கூட்டணி என்பது குறித்து ஆலோசித்து வருகிறோம்’ எனத் தெரிவித்துள்ளார். 

மேலும் நாட்டில் யாரும் கட்சியை (நடிகர் விஜய்) தொடங்கலாம். எந்த கட்சியிலும் சேரலாம். அதே நேரத்தில் யாருக்கு வாக்குகள் என்பதை தமிழ்நாட்டு மக்கள்தான் முடிவு செய்வார்கள்.

Tags: அரசியல் செய்திகள் தமிழக செய்திகள்

Give Us Your Feedback