மணல் கடத்தல்காரர்களால் வெட்டி கொல்லப்பட்ட விஏஓ மகன் நீதிபதி தேர்வில் வெற்றி முழு விவரம்
தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு அருகே உள்ள கோவில்பத்து பகுதியில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்த லூர்து பிரான்சிஸ் சேவியர். பணியில் இருந்த போது மணல் கொள்ளை பிரச்சனையின் காரணமாக ஏற்பட்ட ஒரு வாக்குவாதத்தில், மணல் கொள்ளையர்கள் கும்பலால் லூர்து பிரான்சிஸ் அவர்கள் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் குற்றவாளிகள் இருவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
இந்த சூழலில் தான் மறைந்த கிராம நிர்வாக அதிகாரி லூர்து சேவியர் அவர்களுடைய மகன் மார்ஷல் இயேசுவடியான் .TNPSC தேர்வுகளில் வெற்றி பெற்று தற்போது சிவில் நீதிமன்ற நீதிபதியாக தேர்ச்சி பெற்றிருக்கிறார் மார்ஷல் இயேசுபடியான். பல்வேறு தரப்பினர்களும் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றார்கள்
.
Tags: தமிழக செய்திகள்
