Breaking News

நாடாளுமன்ற தேர்தல் இந்தியா டுடே கருத்துக்கணிப்பு முடிவுகள் ... முழு விவரம்

அட்மின் மீடியா
0

பிரதமர் மோடி தலைமையிலான இந்தியாவின் 17வது அமைச்சரவையின் பதவிக்காலம் இந்த ஆண்டு மே மாதத்துடன் நிறைவு பெறுகிறது. இதனை அடுத்து வரும் நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பு அடுத்த மாத இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் மக்களவைத் தேர்தல் விரைவில் நடக்கவுள்ள நிலையில் அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. மூன்றாவது முறையாக ஆட்சியைக் கைப்பற்றும் முனைப்பில் பாஜகவும், 

இழந்த ஆட்சியை கைப்பற்றியே ஆகவேண்டும் என்ற முனைப்பில் காங்கிரஸ் கட்சியும் பாஜகவை வீழ்த்த வேண்டும் என  எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டுள்ளன. எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியில் மொத்தம் 28 கட்சிகள் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றார்கள், மேலும் இந்தியா கூட்டணியில் மம்தா பானர்ஜி, ஆம் ஆத்மி , நிதிஷ் குமார் என தொடர்சியாக விலகல் ஆகி இருப்பது INDIA கூட்டணிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டிருந்தாலும்,  அந்த கூட்டணியின் மீதும் பலத்த எதிர்பார்ப்பு உள்ளது.

இந்நிலையில், இந்தியா டுடே - சி வோட்டர் இணைந்து The Mood of the Nation's கருத்துக்கணிப்பில், நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களிலும் கருத்துக்கணிப்பு நடத்தி அதன் முடிவுகளை அறிவித்துள்ளது அதன்படி

வரும் நாடாளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 304 இடங்கள், ‘இந்தியா’ கூட்டணிக்கு 71 இடங்கள் கிடைக்கும் - இந்தியா டுடே கருத்துக்கணிப்பில் தெரிவித்துள்ளது

             

கர்நாடகாவில் மொத்தம் 28 நாடாளுமன்ற தொகுதிகள் இருக்கும் நிலையில், அதில் பாஜகவின் என்டிஏ கூட்டணி 24 தொகுதிகளை வெல்லும் எனக் தெரிவித்துள்ளது



ஆந்திராவில் மொத்தம் 25 நாடாளுமன்ற இடங்கள் நிலையில், அதில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் 17 இடங்களில் வெற்றி பெறும் என்று என்றும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் 8 இடங்களில் மட்டுமே வெல்லும் எனக் கூறப்பட்டுள்ளது. 

தெலுங்கானாவில் மொத்தம் 17 நாடாளுமன்ற தொகுதிகளில் 10 இடங்களில் காங்கிரஸ் வெல்லும் எனவும் பாஜக 3 இடங்களிலும் மஜ்லீஸ் கட்சி தனது ஒரு இடத்தை வெல்லும் என தெரிவித்துள்ளது

பஞ்சாப்பில் மொத்தம் 13 நாடாளுமன்ற தொகுதிகளில் ஆம் ஆத்மி 5 இடங்களிலும்பாஜக 2 இடங்களிலும்,  காங்கிரஸ் 1 இடத்திலும் அகாலிதளம் 1 இடத்திலும் வெல்லும் என தெரிவித்துள்ளது

கேரளாவில் மொத்தம் 20 நாடாளுமன்ற இருக்கும் நிலையில் அனைத்தும் இந்தியா கூட்டணிக்கே செல்லும் எனக் கூறப்பட்டுள்ளது. 



டில்லியில் மொத்தமுள்ள 7 மக்களவைத் தொகுதிகளையும் பாஜக கூட்டணியே கைப்பற்றும் எனக் கூறப்பட்டுள்ளது.

மேற்கு வங்கத்தில் மொத்தமுள்ள 42 தொகுதிகளில் திரிணமூல் காங்கிரஸ் 22 தொகுதிகளையும் பாஜக கூட்டணி 18 தொகுதிகளையும் கைப்பற்றும் எனக் கூறப்பட்டுள்ளது.

பிகாரில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மொத்தமுள்ள 40 தொகுதிகளில் 32 தொகுதிகளை வெல்லும் என்றும், காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி 8 தொகுதிகளைக் கைப்பற்றும் எனக் கூறப்பட்டுள்ளது.

உத்தரப் பிரதேசத்தில் பாஜக கூட்டணி மொத்தமுள்ள 80 தொகுதிகளில் 70 தொகுதிகளை கைப்பற்றும் எனக் கூறப்பட்டுள்ளது.

குஜராத்தில் மொத்தம் உள்ள 26 தொகுதிகளில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 26 தொகுதிகளிலும் வெற்றி பெறும் எனவும் வேறு யாருக்கும் 1  தொகுதி கூட கிடைக்காது என்று கூறப்பட்டுள்ளது.


ஜார்க்கண்ட் மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கை : 14 தேசிய ஜனநாயக கூட்டணி -12 இந்தியா கூட்டணி - 2 

அசாம் மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கை -14 தேசிய ஜனநாயக கூட்டணி - 12 இந்தியா கூட்டணி-02

மகாராஷ்டிர மாநிலத்தில் மொத்தம் உள்ள 48 லோக்சபா தொகுதிகளில் 22 தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற வாய்ப்பு உள்ளது என்றும் இந்தியா கூட்டணி 26 தொகுதிகளில் வெல்ல வாய்ப்பு உள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

ஹரியானா மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கை -10 தேசிய ஜனநாயக கூட்டணி - 8 இந்தியா கூட்டணி - 2 

உத்தராகண்ட் மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கை :05 தேசிய ஜனநாயக கூட்டணி - 05 

காஷ்மீர் மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கை - 05 இந்தியா கூட்டணி - 03 தேசிய ஜனநாயக கூட்டணி - 2 

இமாச்சல் பிரதேசம் மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கை : 04 தேசிய ஜனநாயக கூட்டணி :04

 

தமிழ்நாட்டில் மொத்தம் 39 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ள நிலையில், அனைத்திலும் இந்தியா கூட்டணியே வெல்லும் எனக் கூறப்பட்டுள்ளது. 

கடந்த 2019 தேர்தலில் திமுக கூட்டணி தேனியை தவிர 38 தொகுதிகளில் வென்று இருந்தது. இந்த முறை தேனியையும் சேர்த்து 39 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி வெல்லும் என்று கூறப்பட்டுள்ளது. 2019 தேர்தலில் தேனியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ஓபிஎஸ் மகன் ஓ.பி. ரவீந்தரநாத் மட்டும் வெற்றி பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி 47 சதவீத வாக்குகளை பெறும் எனவும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 15 சதவீதமும், மற்ற கட்சிகளுக்கு 38 சதவீத வாக்குகளும் கிடைக்கும் என அதில் கூரப்பட்டுள்ளது

தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய தென் மாநிலங்களில் மொத்தம் 139 தொகுதிகள் உள்ளன. அதில் அதிகபட்சமாக இந்தியா கூட்டணி 73 இடங்களில் வெல்லும் என கூறப்பட்டுள்ளது.

அதேபோல் டைம்ஸ் நவ் ஊடகம், இந்தியா கூட்டணி (I.N.D.I.A) 36 இடங்களையும், பாஜக ஒரு இடத்தையும், அதிமுக கட்சி இரண்டு இடங்களைய கைப்பற்ற வாய்ப்புகள் உள்ளது பாஜக 20.4 சதவீத ஓட்டுகளையும், இந்தியா கூட்டணி (I.N.D.I.A) 59.7 சதவீத ஓட்டுகளையும், அதிமுக 16.3 சதவீத ஓட்டுகளையும், மற்ற கட்சிகள் 3.6 சதவீத ஓட்டுகளையும் கைப்பற்றும் என தனது கருத்துகணிப்பை வெளியிட்டுள்ளது

இந்தியா டுடே கருத்துக்கணிப்பு வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

https://twitter.com/IndiaToday/status/1755528124828352574

டைம்ஸ் நவ் கருத்துக்கணிப்பு வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

https://twitter.com/TimesNow/status/1755258785050862028

Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள்

Give Us Your Feedback