கோபாலபுரத்தில் அமைய இருக்கும் அரசு குத்துச்சண்டை அகாடமி தனியாருக்கு ஒதுக்கப் போவதாக பரவும் பொய்ச்செய்தி முழு விவரம்
கோபாலபுரத்தில் அமைய இருக்கும் அரசு குத்துச்சண்டை அகாடமி தனியாருக்கு ஒதுக்கப் போவதாக பரவும் பொய்ச்செய்தி முழு விவரம்
இதுகுறித்து தமிழக அரசின் உண்மை சரிபார்ப்பு குழு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்:-
இது முற்றிலும் பொய்யான பரப்புரை!
பரவும் வதந்தி:-
கோபாலபுரத்தில் அமைய இருக்கும் அரசு குத்துச்சண்டை அகாடமியை தனியாருக்கு ஒதுக்கப் போவதாக பொய்ச்செய்தி பரப்பப்படுகிறது.
உண்மை என்ன?
மேற்கண்ட செய்தி முற்றிலும் பொய்யானது. இச்செய்தியை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் செயலாளர் திரு. மேகநாத் இ.ஆ.ப., அவர்கள் மறுத்துள்ளார். “இதனை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (SDAT) மட்டுமே நடத்த இருக்கிறது, தனியாருக்கு வழங்குவதாகச் சொல்வது பொய்யானத் தகவல்” என தெரிவித்துள்ளார். இளைஞர்களிடையே குத்துச்சண்டை விளையாட்டை ஊக்குவிக்கும் விதமாக தமிழ்நாடு அரசு இத்திட்டத்தை கொண்டு வருகிறது.
Tags: தமிழக செய்திகள் FACT CHECK
