Breaking News

இந்து முறைப்படி சடங்கு இஸ்லாமிய முறைப்படி அடக்கம் செய்ய உத்தரவிட்ட நீதிமன்றம் நடந்தது என்ன முழுவிவரம்

அட்மின் மீடியா
0

இரு மத பெண்களை மணந்தவர் உடலுக்கு இந்து மதப்படி சடங்கு, இஸ்லாமிய முறைப்படி அடக்கம் செய்ய ஐகோர்ட் உத்தரவு

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பர்மா காலனி வள்ளுவர் நகரில் வசித்து வரும் பாலசுப்பிரமணியன் (எ) அன்வர் உசேன் (வயது 59) தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக டிரைவராக பணிபுரிந்து வருகிறார். 

இவர் கடந்த 36 ஆண்டுகளுக்கு முன்பு, சாந்தி என்பவரை திருமணம் செய்தார். இந்த தம்பதிக்கு ஒரு மகள் உள்ளார்.

இந்நிலையில் சாந்தியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை விட்டு பிரிந்த பாலசுப்பிரமணியன், கடந்த 2019-ல் என் கணவர் குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து விவாகரத்து ரத்து பெற்றார். விவாகரத்தை ரத்து செய்யக்கோரி மேல்முறையீடு செய்தேன். விவாகரத்து ரத்து செய்யப்பட்டது.

திருப்பாலைக்குடி பகுதியைச் சேர்ந்த சையத்அலி பாத்திமா என்பவரை 28 ஆண்டுகளுக்கு முன்பு இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். மேலும் அவர் முஸ்லிம் மதத்துக்கு மாறி தனது பெயரை அன்வர் உசேன் எனவும் மாற்றிக்கொண்டார்.

இதற்கிடையே கடந்த 10 நாட்களுக்கு முன்பு திடீரென அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் உயிரிழந்தார். அவரது உடலை இஸ்லாமிய முறைப்படி அடக்கம் செய்ய சையத்அலி பாத்திமா தரப்பினர் ஏற்பாடு செய்து வந்தனர்.

ஆனால் திடீரென்று அங்கு வந்த முதல் மனைவி சாந்தி தரப்பினர், பாலசுப்பிரமணியனின் பூர்வீக ஊரான ராமநாதபுரம் மாவட்ட பேரையூரில் இந்து முறைப்படி தான் அடக்கம் செய்ய போவதாகவும் உடலை தங்களிடம் தர வேண்டும் என்று தெரிவித்தனர்.

இதையடுத்து இருத்தரப்பினரிடமும் வருவாய் துறையினர் முன்னிலையில் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அங்கும் முடிவு எட்டபடாததால் முதல் மனைவி சாந்தி நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார்

இந்த மனு அவசர வழக்காக நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் மலையேந்திரன் வாதிட்டார்.பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவு: அரசு மருத்துவமனையில் உள்ள மனுதாரரின் கணவர் உடலை முதலில் முதல் மனைவியான மனுதாரரிடம் ஒப்படைக்க வேண்டும். அவர் கணவர் உடலுக்கு அவர் சார்ந்த மத முறைப்படி இறுதி சடங்கு செய்து, அரை மணி நேரத்தில் காரைக்குடி முஸ்லிம் ஜமாத் நிர்வாகத்திடம் உடலை ஒப்படைக்க வேண்டும். பின்னர் உடலுக்கு அவர் 2-வது மனைவி இறுதி மரியாதை செய்து இஸ்லாமிய சடங்குபடி அடக்கம் செய்யலாம். வழக்கு முடிக்கப்படுகிறது என உத்தரவிட்டுள்ளது

Tags: தமிழக செய்திகள் மார்க்க செய்தி

Give Us Your Feedback