Breaking News

திருச்சி தொட்டியம் அருகே போலீஸ் வேன் மோதி ஒருவர் பலி பதற வைக்கும் சிசிடிவி வீடியோ வெளியானது

அட்மின் மீடியா
0

திருச்சி தொட்டியம் அருகே போலீஸ் வேன் மோதி ஒருவர் பலி பதற வைக்கும் சிசிடிவி வீடியோ வெளியானது

திருச்சி தொட்டியம் அருகே அதிவேகமாக வந்த போலீஸ் வேன், வாகனங்கள் மீது கண்மூடித்தனமாக மோதிய விபத்தில் பெண் பலி



திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூர் அருகிலுள்ள சீலைப் பிள்ளையார்புதூரில் இரு சமுதாயத்தினரை அவதூறாக சித்தரித்து மற்றொரு சமுதாயத்தினர் துண்டு பிரசுரங்கள் ஒட்டியதை கண்டித்து போராட்டம் நடைபெற்றது. இதையடுத்து அப்பகுதியில் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்படாமல் இருப்பதற்கு போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

இதில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாரின் வாகனம் ஆற்றங்கரையிலிருந்து சீலைப்பிள்ளையார் பேருந்து நிலையத்தின் அருகே சென்றபோது, எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த மருதாயி(45), தீனதயாளன் ஆகியோர் மீது மோதியது.  மேலும் வந்த வாலிபர் தீபன் மீதும் மோதியது. இதில் இருசக்கர வாகனம் போலீஸார் வாகனத்தின் அடியில் சிக்கிக் கொண்டது. இதில் மருதாயி சம்பவ இடத்திலேயே இறந்து போனார். காயமடைந்த மற்ற இருவரும் சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றார்கள்.

பாதுகாப்புக்காக வந்த காவல்துறை வேனை வேகமாக ஓட்டி வந்த காவலர் எதிர் திசையில் இடது ஓரமாக சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனத்தில் நேருக்கு நேர் மோதியல் இருசக்கர வாகனத்தில் வந்த பெண் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

வீடியோ பார்க்க:- இங்கு கிளிக் செய்யவும்

https://twitter.com/Melurthiru/status/1753104162198581634

Tags: தமிழக செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback